ரஜினிகாந்த் நடித்த படங்களில் பெறும் வெற்றி கொடுத்து அதிக நாட்கள் ஓடிய படங்களில் முக்கியமான திரைப்படம் சந்திரமுகி. சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பலமுறை திட்டமிட்டார் இயக்குனர் வாசு.
ஆனால் அவரால் அதற்கு பிறகு அந்த படத்தை வெகு காலங்களாக எடுக்க முடியவில்லை. ஏனெனில் நடிகர் ரஜினிகாந்த் எப்போதும் பிஸியாக இருந்த காரணத்தினால் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த பி.வாசு பிறகு அந்த கதையை நடிகர் லாரன்ஸை வைத்து படமாக்கினார்.
நேற்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது. அதை வைத்து படத்தின் கதையை ஓரளவு ஊகிக்க முடிகிறது. சந்திரமுகி முதல் பாகத்தின் கதை நடந்து 17 வருடம் கழித்து அதே வேட்டையன் ராஜா அரண்மனையை லாரன்ஸின் குடும்பத்தார் வாங்குகின்றனர்.
இந்த முறையும் சந்திரமுகி அறையில் நாட்டியமாடும் ஒலி கேட்கிறது. ஆனால் இந்த முறை யாரும் சந்திரமுகியாக மாறி நடனமாடவில்லை. அதற்கு பதிலாக நிஜ சந்திரமுகியே நடனமாடுகிறாள். ஆமாம் வேட்டையன் ராஜா மறுபடி பிறந்துள்ளான்.
எனவே அவனை பழி தீர்க்க நிஜ சந்திரமுகியே வருகிறாள். லாரன்ஸ்தான் அந்த வேட்டையன் ராஜா. 200 வருடங்களுக்கு முன்பு தன்னை கொன்ற வேட்டையன் ராஜாவை சந்திரமுகி எப்படி பழி தீர்ப்பாள் என்பதே படத்தின் கதையாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ட்ரைலர் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.
ட்ரைலர் லிங்க்: இங்கு க்ளிக் செய்யவும்






