Connect with us

கைதி படத்துக்கு பேர் வைக்குறதுக்கு மணிரத்தினம் வரைக்கும் பிரச்சனையாச்சு!.. உண்மையை உடைத்த லோகேஷ் கனகராஜ்!..

karthi maniratnam

Cinema History

கைதி படத்துக்கு பேர் வைக்குறதுக்கு மணிரத்தினம் வரைக்கும் பிரச்சனையாச்சு!.. உண்மையை உடைத்த லோகேஷ் கனகராஜ்!..

cinepettai.com cinepettai.com

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் தற்சமயம் முக்கியமானவராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாறி உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு தனி வரவேற்பு உருவாகியுள்ளது.

இப்போதைய நிலைக்கு எந்த ஒரு கதாநாயகனை வைத்து லோகேஷ் கனகராஜ் படம் இயக்கினாலும் அந்த திரைப்படம் ஹிட் அடிக்கும் அந்த அளவிற்கு அவரது திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. தனது இரண்டாவது படத்தில் இருந்து அவருக்கான எதிர்பார்ப்பு என்பது தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது.

முதல் படமான மாநகரம் சின்ன கதாநாயகர்களை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். ஆனால் கைதி திரைப்படம் கார்த்தியை கதாநாயகனாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதால் அந்த படத்திற்கு வரவேற்பு அதிகமாகவே கிடைத்தது.

அதன் மூலம்தான் லோகேஷ் கனகராஜ் யார் என்று மக்கள் அறிந்து கொண்டார்கள். கைதி திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் கூறும் பொழுது அந்த படத்தை இயக்குவது கூட கஷ்டமாக இல்லை. ஆனால் அந்த படத்தின் பெயர் வைப்பதில் நிறைய பிரச்சனை இருந்தது எனப் கூறியுள்ளார்.

முதன் முதலில் இந்த படத்திற்கு மாநகர காவல் என்னும் விஜயகாந்த் படத்தின் பெயரை தான் வைத்துள்ளனர் ஏனெனில் திருச்சி மாநகராட்சியில் உள்ள மொத்த காவல்துறையைக் கொண்டுதான் படத்தின் கதை செல்லும். கிட்டத்தட்ட இந்த பெயர் படத்திற்கு பொருத்தமான பெயர் என்றாலும் கூட அப்பொழுது அந்த பெயரை வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே ஒவ்வொரு பேராக மாற்றி இறுதியில் கைதி என்னும் பெயரை முடிவு செய்தனர். ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை இருந்தது கைதி என்னும் பெயரின் உரிமையை இயக்குனர் மணிரத்தினம் வாங்கி இருந்தார். எனவே கார்த்தி மூலமாக அந்த பெயரை திரும்ப வாங்கிக் கொண்டார் லோகேஷ். ஏனெனில் கார்த்தி ஏற்கனவே இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

அந்த செல்வாக்கை பயன்படுத்திதான் கைதி என்ற பெயரை வாங்க முடிந்தது என்று லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

POPULAR POSTS

rajinikanth vijayakanth
tms trajendar
gv prakash
gv prakash
jonita
ajith
To Top