News
நான் கருப்பு திராவிடன்..! ராஜாவுக்கு அதிர்ச்சி குடுத்த யுவன்!
சமீப காலமாக இளையராஜா குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதில் தூபம் போடும் விதமாக யுவன் சங்கர் ராஜா இன்ஸ்டாவில் போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் பிரதமர் மோடி குறித்த புத்தகம் ஒன்றில் இளையராஜா பிரதமரை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் தனது நிலைபாட்டை மாற்றிக் கொள்ளப்போவதில்லை என இளையராஜா கறாராக உள்ளார்.
அவரது நிலைபாட்டிற்கு எதிரான வகையில் அவரது மகனும், இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா இன்ஸ்டாவில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் “நான் கருப்பு திராவிடன்.. பெருமைமிகு தமிழன்” என குறிப்பிட்டுள்ளதுடன் கருப்பு வண்ண சட்டை மற்றும் வேஷ்டியும் அணிந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
