News
ஒரே ஒரு நைட் பார்ட்டிதான் காரணம்!.. தடம் மாறிய சினேகாவின் வாழ்க்கை..
தமிழ் சினிமாவில் புன்னகைக்கரசி என்று பலராலும் போற்றப்படும் நடிகையாக இருப்பவர் நடிகை சினேகா. 90களில் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சினேகா தொடர்ந்து பல பட வாய்ப்புகள் பெற்றார்.
அறிமுகமான சில காலங்களிலேயே அதிகமான வரவேற்பு பெற்ற நடிகையாக சினேகா மாறினார். அவர் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் அதிகபட்சம் நாகரிகமான ஆடைகளை அணிந்து நடித்து வந்தார் சினேகா.

இதுவே அவருக்கு ஒரு ரசிக்கப்பட்டாளத்தை உருவாக்கியது தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களாக இருந்த விஜய் அஜித் சிம்பு சூர்யா என்று பல நடிகர்களுடன் நடித்திருக்கிறார் நடிகை சினேகா.
சினேகாவுக்கு வந்த அதிர்ஷ்டம்:
இதற்கு நடுவே அவரைக் குறித்து பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் ஒரு பேட்டியில் கூறும் பொழுது ஒரு பார்ட்டி தான் நடிகை சினேகாவின் மொத்த வாழ்க்கையை மாற்றியது என்று கூறுகிறார்.
கேரளாவில் ஸ்டார் பார்ட்டி என்றொரு நிகழ்ச்சி நடக்கும் .அதில் திரை துறையை சேர்ந்த பலரும் கலந்து கொள்வார்கள். அந்த பார்ட்டியில் கலந்து கொள்ளும் ஹீரோக்களை காண்பதற்காக சினேகா ஒரு முறை அங்கு சென்று இருந்தார்.

அப்பொழுது அவரைப் பார்த்த மலையாள திரை துறையினர் அவர் ஒரு நடிகை ஆவதற்கான தகுதி பெற்றவர் என்று அவரை பற்றி கூறியிருக்கின்றனர். இதனை தொடர்ந்துதான் அவருக்கு மலையாளத்தில் நடிகையாக வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை அதனை தொடர்ந்து தமிழில் அவருக்கு பட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தமிழில் ஒரு வெற்றிகரமான கதாநாயகியாக மாறினார் சினேகா. ஒருவேளை சினேகா அன்று அந்த பார்ட்டிக்கு செல்லாமல் இருந்திருந்தால் அவர் கதாநாயகியாகவே ஆகியிருக்க மாட்டார் என்கிறார் அந்தணன்.
