Connect with us

ஒரு படத்தையே காப்பாத்துன பாட்டு! – பழைய படத்தில் வரும் அந்த பாட்டு என்ன தெரியுமா?

Cinema History

ஒரு படத்தையே காப்பாத்துன பாட்டு! – பழைய படத்தில் வரும் அந்த பாட்டு என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் படம் இயக்கும்போது வெளியிடும்போது பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்துள்ளன. அப்படி ஒரு பாடல் ஒரு படத்தையே காப்பாற்றியுள்ளது தெரியுமா?

1971 ஆம் ஆண்டு நடிகர் சோ மனோரமா நடித்து முகமது பின் துக்ளக் என்கிற திரைப்படம் வெளியானது. 1968 இல் இந்த படம் நாடகமாக நடிகர் சோவால் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி வெளியான காலக்கட்டத்திலேயே நிறைய விமர்சனங்களை பெற்றது.

எனவே இதை படமாக்கும்போது சரியாக படமாக்க வேண்டும் என முடிவு செய்தனர் பட குழுவினர். படம் இஸ்லாம் மதத்தை விமர்சிக்கும் வகையில் இருக்கும் என்பதே பெரும்பாலான மக்களின் கருத்தாக இருந்தது. இதை தெரிந்துக்கொண்ட சோ படத்திற்கு பெயர் வரும்போதே அதில் வரும் பாடல் இஸ்லாம் மதத்திற்கு ஆதரவாக அமைய வேண்டும் என முடிவெடுத்தார்.

இதற்காக முதல் பாடலை இசையமைக்குமாறு எம்.எஸ்.வியிடம் கூறினார். எம்.எஸ் வியும் சிறப்பான பாடலை இயற்றி கொடுத்தார். பிறகு படம் வெளியானது. பலரும் படம் குறித்து எதிரான கருத்துக்களுடன் திரையரங்கிற்குள் வந்தனர். படம் துவங்கிய உடனே அல்லாஹ் அல்லாஹ் என்கிற அந்த பாடல் ஒலிக்க துவங்கியது.

உடனே அனைவருக்கும் படத்தின் மீது நேர்மறையான எண்ணம் ஏற்பட்டது. இப்படியாக அந்த ஒரு பாடல் முகமது பின் துக்ளக் திரைப்படத்தையே காப்பாற்றி விட்டது என சோ ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Bigg Boss Update

biggboss
soundarya
vijay sethupathi darsha gupta
anshita
biggboss
manimegalai vj vishal
To Top