Connect with us

மது போதையில் சேட்டையில் இறங்கிய சீதா ராமம் நடிகை.. தப்பு தப்பா பண்றீங்களேமா!..

actress Mrunal

Actress

மது போதையில் சேட்டையில் இறங்கிய சீதா ராமம் நடிகை.. தப்பு தப்பா பண்றீங்களேமா!..

Social Media Bar

Actress Mrunal Thakur: ஒரு சில நடிகைகள் ஒரு படம் நடித்தாலும், அது ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று விடும். அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே அனைவரின் மனதிலும் இடம் பிடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி அனைவரின் மத்தியிலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல பெயர் பெற்ற திரைப்படம் தான் சீதா ராமம். படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் மிருணாள் தாகூர் பெற்றார்.

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாகூர் நடித்திருந்தார்கள். இந்த படம் மிருணாள் தாகூருக்கு சிறந்த படமாக அமைந்தது. சீதா மகாலட்சுமியாக இந்த படத்தில் தோன்றிய இவரை ரசிகர்கள் கொண்டாடினார்கள். அந்த அளவிற்கு இவரின் நடிப்பு இந்த படத்தில் அமைந்திருந்தது. மிகவும் உணர்வுபூர்வமாக நடந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

ஹிந்தியில் பல தொடர்களிலும், படங்களிலும் நடித்த மிருணாள் தாகூர் சீதா ராமன் படத்திற்கு பிறகு, ‘ஹாய் நன்னா’ என்ற அடுத்து ஒரு வெற்றி படத்திலும் நடித்திருந்தார். பிறகு தி ஃபேமிலி மேன் என்ற தெலுங்கு படத்தில் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக நடித்தார். தற்பொழுது பல தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் இரண்டு சைமா விருது உட்பட பிலிம்பேர் விருதை பெற்றிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் மிருணாள் தாகூர்

மிருணாள் தாகூர் தற்பொழுது ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்து வரும் நிலையில், தன்னுடைய ரசிகர்களுக்காக சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்பொழுது இவர் பதிவிட்டு இருக்கும் ஒரு பதிவானது ரசிகர்களின் மத்தியில் பல கருத்துக்களை பெற்று வருகிறது. மது அருந்தியது போன்று எடுத்த வீடியோ தற்பொழுது சமூகவலைத்தளங்களில் பரவி வருவதால், அவரின் ரசிகர்கள் மிருணாள் தாகூர் ஒன்றும் குடிக்கவில்லை எனவும், காமெடியாக எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தான் எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

To Top