Connect with us

எனக்கு கடைசி ஆசைன்னு ஒண்ணு இருந்தா அது இதுதான்!.. ஆச்சி மனோரமாவிற்கு ஆசையை நிறைவேற்றிய தமிழ் சினிமா..

manorama

Cinema History

எனக்கு கடைசி ஆசைன்னு ஒண்ணு இருந்தா அது இதுதான்!.. ஆச்சி மனோரமாவிற்கு ஆசையை நிறைவேற்றிய தமிழ் சினிமா..

Social Media Bar

Aachi Manorama : தியாகராஜ பாகவதருக்கு பிறகு வந்த அடுத்த தலைமுறையினர்தான் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றனர். அந்த காலக்கட்டத்தில்தான் எம்.ஜி.ஆர், சிவாஜி, நாகேஷ் என பல முக்கிய நடிகர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்கள்.

அதே காலக்கட்டத்தில்தான் நடிகை மனோரமாவும் நடிப்பதற்கு சினிமாவிற்கு வந்தார். நடிகை மனோரமா முதலில் நாடகங்களில்தான் நடித்து வந்தார். அப்போது சினிமாவிற்கு வந்த பெரும்பான்மையான நபர்கள் அதற்கு முன்பு நாடக நடிகர்களாக இருந்தவர்கள்தான்.

அப்படி சினிமாவிற்கு வந்த மனோரமா அதன் பிறகு சினிமாவில் பெரும் உச்சத்தை தொட்டார். கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் மனோரமா. அப்படியாக அவர் நடித்த திரைப்படங்களில் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை அவர் சிறப்பாக நடிப்பார்.

அருந்ததி, 23 ஆம் புலிகேசி, தாமிரபரணி, சிங்கம் என அவரது கடைசி காலங்களிலும் கூட படங்களில் நடித்துக்கொண்டுதான் இருந்தார். இந்த நிலையில் ஒரு பேட்டியில் அவர் பேசும்போது சினிமாவிற்கு வரும்போதே எனக்கு ஒரு மிகப்பெரிய ஆசை இருந்தது. நான் நடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

என்றுமே சினிமாவை விட்டு போய்விட கூடாது. சாகும் வரை நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறியிருந்தார். அதே போலவே கடைசி காலம் வரை தமிழ் சினிமா அவருக்கு வாய்ப்பு அளித்துக்கொண்டுதான் இருந்தது. ஒரு வகையில் தமிழ் சினிமாதான் அவரது ஆசையை நிறைவேற்றியது என கூறலாம்!.

To Top