புருஷன்கிட்ட அதுக்காக அனுமதி கேட்ட ஆர்த்தி.. தடம் மாறிய ஜெயம் ரவி விவாகரத்து..

ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி இருவருமே 18 வருடங்களாக நல்ல கணவன் மனைவியாக இருந்து தற்சமயம் பிரிவை கண்டுள்ளனர். இது பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏனெனில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை அதில் எந்த ஒரு ப்ளாக் மார்க்கும் இல்லாத ஒரு நடிகராக இருந்து வந்தவர் ஜெயம் ரவி. மேலும் ஜெயம் ரவி ஆரம்பத்தில் இருந்தே நிறைய வெற்றி படங்களை கொடுத்துதான் தற்சமயம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

இந்த நிலையில் அவர் கார்த்தியை காதலித்துதான் திருமணம் செய்து கொண்டார் இத்தனை வருட ஜெயம் ரவியின் திருமண வாழ்க்கையில் யாருமே எந்த ஒரு குறையையும் கண்டதில்லை என்றுதான் கூற வேண்டும்.

புருஷன்கிட்ட அதுக்காக அனுமதி கேட்ட ஆர்த்தி:

jayam ravi aarthi

Social Media Bar

மேலும் அவர்கள் வாழ்க்கை குறித்து சர்ச்சையான தகவல்கள் கூட எதுவும் வெளிவந்தது கிடையாது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஜெயம் ரவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய போவதாக செய்திகள் பரவி வந்தன. இது பலருக்குமே ஆச்சரியத்தை கொடுத்து வந்தது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடிகர் ஜெயம் ரவியே தனது மனைவியை பிரிய போவதை சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இதற்கு பதில் அளித்த ஆர்த்தி கூறும்பொழுது ஜெயம் ரவி என்னுடைய விருப்பமே இல்லாமல் இந்த விவாகரத்தை கூறியிருக்கிறார்.

எனக்கு இது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக இருக்கிறது. மேலும் எனது பிள்ளைகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியிருந்தார் ஆர்த்தி. இந்த நிலையில் எப்பொழுதும் ஆர்த்தி ஜெயம் ரவியுடன் சேர்வதற்குதான் முயற்சி செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஆர்த்தி கூறும்போது ஜெயம் ரவியுடன் தனியாக சந்தித்து பேசுவதற்கு கூட எனக்கு சில காலங்களாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை நான் அவருடன் சேர்ந்து வாழ நினைக்கிறேன். என்று கூறி இருப்பது ரசிகர்களுக்கு ஆர்த்தி மத்தியில் நேர்மறையான கருத்துக்களை உண்டாக்கி இருக்கின்றன.