Connect with us

2 மாசத்துல 23 கிலோ ஏத்தி திரும்ப 2 மாசத்துல குறைச்சேன்!. சிம்புவிற்கே டஃப் கொடுத்த நடிகை!..

simbu

News

2 மாசத்துல 23 கிலோ ஏத்தி திரும்ப 2 மாசத்துல குறைச்சேன்!. சிம்புவிற்கே டஃப் கொடுத்த நடிகை!..

Social Media Bar

Abarnathi weight loss : திரைப்படங்களுக்காக அதிகமாக உழைக்கும்போது அந்த திரைப்படம் நடிப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தருகிறது. அப்படியான ஒரு முன்னேற்றத்தைதான் பெற்றுள்ளார் இறுகப்பற்று திரைப்படத்தில் நடித்த நடிகை அபர்நதி. அபர்நதி தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆக முயற்சித்து வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு முதல் படமாக அமைந்த திரைப்படம் இறுகப்பற்று. இந்த திரைப்படம் திரையரங்குகளில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் அபர்நதி உடல் பருமனான பெண்ணாக நடித்திருந்தார்.

அவர் உடல் எடை காரணமாக அவரது கணவர் அவரை ஒதுக்கி வருவார். அதன் பிறகு அவர் உடல் எடையை குறைப்பதை வைத்து படத்தின் கதை செல்லும். இதற்காக தனது உடல் எடையை இரண்டே மாதத்தில் அதிகரித்துள்ளார் அபர்நதி.

இதுக்குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும்பொழுது, இயற்கையான முறையில் உடல் எடையை அதிகரிப்பதற்கு டயட் செய்யும் டாக்டர் உதவினார். இதனால் உடல் எடையை அதிகரிக்க காலையிலேயே பழைய சோறு எல்லாம் சாப்பிட்டேன்.

அதன் மூலமாக கிட்டத்தட்ட 23 கிலோ உடல் எடையை அதிகரித்தேன். அதன் பிறகு உடல் பருமனான காட்சிகள் எடுக்கப்பட்ட பிறகு அடுத்த இரண்டு மாதங்களில் உடல் எடையை குறைத்தேன். உடல் எடையை குறைக்கும்போது வெறும் நீர் ஆகாரமாகதான் எடுத்துக்கொண்டேன் என கூறியுள்ளார் அபர்நதி.

இதற்கு முன்னர் பத்து தல படத்திற்காக சிம்பு உடல் எடையை அதிகரித்தது வெகுவாக பேசப்பட்டது. கிட்டத்தட்ட தற்சமயம் அதை விட அதிகமாக உடல் எடையை அதிகரித்து குறைத்துள்ளார் அபர்நதி.

To Top