20 லட்சம் தர்ரோம்.. அந்த அதிகாரியை மாத்துங்க!.. எம்.ஜி.ஆரிடம் டீல் பேசி அடி வாங்கிய கும்பல்!.
MGR Mass movement: சினிமாவில் எப்படி ஒரு கதாநாயகனாக இருந்தாரோ அதேபோல அரசியலிலும் கதாநாயகனாக இருந்தவர் எம்.ஜி.ஆர். மக்களுக்கு அவர் நிறைய நன்மைகள் செய்துள்ளார் என்பதாலேயே அவருக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது.
இதுவே அவரை உடனடியாக முதலமைச்சராகியது. எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது பல நன்மைகள் செய்திருந்தாலும் அவரது கட்டுக்குள் இல்லாமல் சில விஷயங்களும் இருந்தன. அதில் தென் தமிழகத்தில் நடந்த குற்றங்கள் அதிகமானவை. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகள் குற்றத்திற்கு பெயர் போன இடமாக இருந்தது.
எனவே ஐ.பி.எஸ் பயிற்சிக்கு அதிகாரிகளை அனுப்பும் ஒரு இடமாக திருநெல்வேலியும் தூத்துக்குடியில் இருந்தது. எந்த நிலையில் அப்போதைய காலகட்டத்தில் வட இந்தியாவில் இருந்து ஜெய்ஸ்வால் என்கிற அதிகாரி திருநெல்வேலி தூத்துக்குடியில் நடக்கும் தவறுகளை சரி செய்வதற்காக அங்கு மாற்றப்பட்டார்.

ஏனெனில் அவர் கொஞ்சம் நேர்மையான அதிகாரி ஆவார். அப்போது தூத்துக்குடியில் கள்ளச்சாராயம் மிகவும் பிரபலமாக இருந்தது. சாதாரண கடைகளில் கூட கள்ளச்சாராயம் கிடைக்கும் நிலைமை இருந்தது. இதனை அறிந்த ஜெய்ஸ்வால் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தார்.
அங்கு கள்ளச்சாராயம் செய்யும் பெரும் கும்பலை கண்டறிந்து அவர்களை கைது செய்தார். அப்போதுதான் ஒரு விஷயம் தெரிந்தது. ஆளுங்கட்சிக்கு நெருக்கமான அமைச்சர்தான் இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று, இந்த நிலையில் அந்த அமைச்சர் நேரடியாக எம்.ஜி.ஆரிடம் இதை சென்று சொன்னால் நாம் மாட்டிக் கொள்வோம் என்பதை அறிந்து லஞ்சம் மூலமாக அந்த அதிகாரியை மாற்ற முயற்சி செய்துள்ளார்.
இந்த விஷயம் எம்.ஜி.ஆருக்கு எப்படியோ தெரிந்து விட அந்த அனுப் ஜெய்ஸ்வாலை பற்றி விசாரித்துள்ளார் எம்ஜிஆர். அப்பொழுது அவர் நேர்மையான அதிகாரி என்றும் மேலும் அங்கு பல காலங்களாக ஆட்டம் காட்டி வந்த தர்மா என்னும் ரவுடியை என்கவுண்டர் செய்துள்ளார் என்பதும் தெரிந்த பிறகு அவர் தூத்துக்குடியில்தான் இருக்க வேண்டும் என்று எம்ஜிஆர் உத்தரவிட்டு உள்ளார். இதனால் அமைச்சர்களால் கூட அந்த அதிகாரியை மாற்ற முடியாமல் போயுள்ளது.