News
கார் வாங்குறதுல கூட போட்டியா.. விஜய்க்கு எதிரா அஜித் இறக்கிய கார்!..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்பொழுது அவரின் ரசிகர்களால் தல என்று அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.
இவர் தன்னுடைய ரசிகர் மன்றங்களை கலைத்த போதும், இவருக்கு இருக்கும் ஆதரவு இன்னும் அதிகளவில் உள்ளது. என்னுடைய சொந்த தேவைக்காகவும், என்னுடைய படத்திற்காகவும் ரசிகர்களை நான் பயன்படுத்த மாட்டேன். என்னுடைய படம் பிடித்தால் வந்து பாருங்கள். மற்றபடி உங்கள் குடும்பங்களை பாருங்கள் என ரசிகர்களுக்கு கருத்துக்களை கூறி வந்த அஜித், தற்பொழுது எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து வருகிறார்.
இவ்வாறு ஒரு நடிகர், ரசிகர் மன்றங்களை கலைத்த போதும் மக்கள் மத்தியில் இன்றும் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
மேலும் இவர் ஒரு கார், பைக் ரேசர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். தற்பொழுது இவர் வாங்கி இருக்கும் காரை பற்றி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. .
நடிகர் அஜித்குமார்
தென்னிந்திய தமிழ் திரைப்பட நடிகர் ஆன அஜித் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, வில்லன், அட்டகாசம், மங்காத்தா, அசல், பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்துள்ளார்.
மேலும் ரசிகர்கள் இவரை தல என்றும், அல்டிமேட் ஸ்டார் என்றும், ஏகே என்றும் அழைத்து வருவதுண்டு. மேலும் இவர் அமர்க்களம் படத்தில் நடித்த போது நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தொடக்க காலத்தில் விளம்பர படங்களில் மட்டுமே நடித்து வந்துள்ளார் நடிகர் அஜித்

இந்நிலையில் அஜித் நடிகராக மட்டுமல்லாமல் மோட்டார் பந்தயம், கார் பந்தயம் போன்ற பந்தயங்களில் கலந்து கொள்வார். மேலும் படத்திற்காக கார் ஓட்டுவது, பைக் ஓட்டுவது போன்ற சாகசங்களை டூப் வைத்துக் கொள்ளாமல் இவரை செய்வார். மேலும் மோட்டார் பந்தயங்களில் அதிக ஆர்வத்துடன் கலந்து கொள்வதால் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தார் அஜித்.
இவ்வாறு படங்கள் மற்றும் பந்தயங்களில் கலந்து கொள்வதை தனது இரு கண்களாக வைத்துக் கொண்டார் அஜித். இதனால் அவர் பல கார்களையும் பைக்குகளையும் வாங்குவதில் ஆர்வம் உடையவராக இருப்பார்.
விஜய்க்கு போட்டியாக வாங்கிய கார்
தற்பொழுது அஜித் புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த கார் 9 கோடி மதிப்புள்ள ஃபெராரி கார். மேலும் அந்தக் காரை வாங்கிய வீடியோவும், அதனை ரோட்டில் ஓட்டிச் செல்லும் வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் சமீபத்தில் விஜய் புதிய கார் ஒன்று வாங்கினார் அது ரோல்ஸ் ராய்ஸ் கார். ஆனால் சில காரணங்களுக்காக அதை விற்க போவதாகவும், சில தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அந்த காரை விற்று விட்டு லெக்ஸஸ் என்னும் காரை அவர் வாங்கி இருப்பதாகவும் தகவல் வெளிவந்தது.
இந்நிலையில் தான் விஜய் கார் வாங்கியதும் அவருக்கு போட்டியாக அஜித் கார் வாங்கியிருக்கிறார் என சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.
