அஜித்தின் அடுத்த படத்தில் இறங்கும் இளம் நடிகை.. வாக்கு தவறினாரா அஜித்?
தமிழ் சினிமாவிலேயே முடி நரைத்த பிறகும் கூட அதை அப்படியே வெளிகாட்டிய ஒரு நடிகராக அஜித் தான் இருந்து வருகிறார். பெரும்பான்மையாக கதாநாயகனாக நடிக்கும் நடிகர்கள் தங்களுடைய உண்மை தோற்றத்தை வெளிக்கொண்டு காட்ட மாட்டார்கள்.
ஆனால் ரஜினிகாந்த் மாதிரியான ஒரு சிலர் திரைக்கு வெளியே விழாக்களுக்கு வரும் பொழுது தங்களுடைய உண்மை தோற்றத்தில் வருவது உண்டு. ஆனாலும் விஜய், மாதவன் போன்ற பல நடிகர்கள் விழாக்களுக்கு வரும் பொழுது கூட முகத்தில் அலங்காரம் செய்து கொண்டு தான் வருவார்கள்.
ஆனால் திரைப்படங்களிலேயே அப்படி இல்லாமல் தனக்கு வயதானதை அப்படியே காட்டி நடிக்கும் நடிகராக அஜித் இருந்து வருகிறார். நரைத்த முடியுடன் நடிக்கும் காரணத்தினால் அவர் வயதுக்கு ஏற்ற நடிகைகளுடன் சேர்ந்ததுதான் நடிப்பேன் என்று அஜித் கூறியிருந்தார்.
ஏனெனில் வீரம் திரைப்படத்தில் அவர் தமன்னாவுடன் சேர்ந்து நடித்த பொழுது அது அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானது. அதனால் தான் துணிவு திரைப்படத்தில் கூட மஞ்சுவாரியரை கதாநாயகியாக வைத்து அந்த திரைப்படத்தில் அஜித் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் அடுத்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அப்படி ஸ்ரீ லீலா நடிக்கும் பட்சத்தில் அது பொருத்தமான விஷயமாக இருக்காதே என்பது பலரது எண்ணமாக இருக்கிறது. ஆனால் ஸ்ரீலீலாவுக்கு தகுந்தார் போல அஜித்துக்கு மேக்கப் செய்யப்படலாம் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.