ரசிகர்களின் பல வருட காத்திருப்புக்கு பிறகு இன்று திரையரங்கில் வெளியாகும் திரைப்படமாக விடாமுயற்சி திரைப்படம் இருந்து வருகிறது. நடிகர் அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கிய இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகமாகவே இருந்தது.
இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், ரெஜினா கெசாண்ட்ரா, த்ரிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் கதை பலரும் அனுமானித்தப்படியே ஹாலிவுட் திரைப்படமான ப்ரேக் டவுன் திரைப்படத்தின் கதையோடு ஒத்து போகிறது.
ஒரு நெடுஞ்சாலையில் அஜுத்தும் அவர் மனைவி த்ரிஷாவும் காரில் சென்றுக்கொண்டுள்ளனர். அப்போது கார் எதிர்பாராத விதமாக ப்ரேக் டவுன் ஆகிவிடுகிறது. இந்த நிலையில் உதவி கேட்டு நிற்கும் சமயத்தில் எதிர்பாராத விதமாக த்ரிஷா காணாமல் போகிறார்.
அந்த நெடுஞ்சாலையில் த்ரிஷாவை தேடி செல்லும் அஜித் செய்யும் விஷயங்களே கதையாக இருக்கிறது. முதல் பாதியில் கடத்தல் குழுவிடம் கெஞ்சி கொண்டிருக்கும் அஜித் அடுத்த பாதியில் அதிரடியில் இறங்குகிறார். ஏற்கனவே இயக்குனர் மகிழ் திருமேணி இயக்கிய தடம், தடையற தாக்க மாதிரியான படங்களை போலவே வேகம் குறையாமல் கதை செல்கிறது.
மகிழ் திருமேணி இந்த படத்தை ஹாலிவுட் தரத்தில் எடுத்திருக்கிறார். நடிகர் அர்ஜுன் மற்றும் ரெஜினாவின் நடிப்பும் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. பொதுவாக பெரிய ஹீரோக்களுக்கு இண்ட்ரோ பயங்கரமாக இருக்கும். ஆனால் அஜித்துக்கு இந்த படத்தில் இண்ட்ரோ கூட சிம்பிளாகவே அமைந்துள்ளது.
தனி ஒரு ஆளாக இந்த கடத்தல் கும்பலை அஜித் சமாளிப்பதையும் படத்தின் சண்டை காட்சிகளையும் சிறப்பாக ஆக்கியுள்ளனர். எனவே படம் நல்ல வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.