Connect with us

பிச்சைக்காரனும், பணக்காரனும்…நாகார்ஜுனா தனுஷ் கூட்டணியில்… வெளியானது குபேரா டீசர்..!

Tamil Trailer

பிச்சைக்காரனும், பணக்காரனும்…நாகார்ஜுனா தனுஷ் கூட்டணியில்… வெளியானது குபேரா டீசர்..!

பெரும்பாலும் நடிகர் தனுஷ் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வெறும் சண்டை காட்சிகள் மட்டும் கொண்ட படங்கள் என்று இல்லாமல் அவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படமும் வித்தியாசமானதாக இருக்கிறது.

அப்படியாக தற்சமயம் அவர் குபேரா மற்றும் இட்லி கடை ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். குபேரா திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் இந்த திரைப்படத்தில் நாகார்ஜுனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் இந்திய அளவில் பிரபலமான நடிகை ராஷ்மிகாவும் இந்த படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை சேகர் கமுலா இயக்க இருக்குகிறார். இந்த படம் தமிழ் ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக இருக்கிறது.

வருகிற ஜூன் 20 இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. டீசரை பார்க்கும் பொழுது தனுஷ் ஒரு பிச்சைக்காரனாக இருக்கிறார் என்று தெரிகிறது.

அதேபோல படத்தின் வில்லன் ஆன ஜிம் சார்ப் ஒரு பணக்காரராக இருக்கிறார் இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் பிரச்சனை தான் படத்தின் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது பெரும்பாலும் கதை மும்பையில் நடப்பதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

To Top