Cinema History
விருதுகளை எல்லாம் எடுத்து குப்பையில் போட்ட நாகேஷ்… இதுதான் காரணம்!.
Actor Nagesh : தமிழ்நாட்டில் உள்ள காமெடி நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நாகேஷ். நகைச்சுவை என்றால் வெறும் வாய் வார்த்தையாக பேசுவது என்றுதான் இப்போது சினிமாவில் பார்க்கப்படுகிறது.
ஆனால் அதற்கு என்று உடல் மொழி என்று ஒன்று இருக்கிறது. அவற்றை வெளிப்படுத்தி நகைச்சுவை செய்யத் தெரிந்தவர்தான் நடிகர் நாகேஷ். இதனாலே நாகேஷின் நகைச்சுவைகளுக்கு அதிகமான வரவேற்புகள் இருந்தது.
தொடர்ந்து சிவாஜி எம்.ஜி.ஆர் என்று யார் படமாக இருந்தாலும் அவரது நகைச்சுவைக்கு வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருந்தன. அதைத் தாண்டி அவர் ஒரு சிறப்பான நடிகர் என்று கூறலாம். காலம் முழுக்க இயக்குனர் கே பாலச்சந்தர் நாகேஷ் மட்டுமே சிறந்த நடிகர் என்று கூறுயிருக்கிறார் என்றால் நாகேஷ் எப்படி ஆன நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் என்பதை பார்க்க வேண்டும்.

அதனால்தான் தொடர்ந்து கமல்ஹாசனும் தன்னுடைய திரைப்படங்களான அவ்வை சண்முகி, அபூர்வ சகோதரர்கள், பஞ்சதந்திரம், மைக்கேல் மதன காமராஜன், என்று பல படங்களில் நாகேஷை நடிக்க வைத்திருப்பார். பொதுவாக விருதுகளுக்கு பிரபலங்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
எந்த ஒரு பிரபலத்தின் வீட்டிற்கு சென்றாலும் அவர்கள் இதுவரை வாங்கிய விருதுகளை அடுக்கி வைத்திருப்பதை பார்க்க முடியும். ஆனால் நாகேஷின் வீட்டிற்கு சென்றால் மட்டும் அப்படி எதுவும் பார்க்க முடியாதாம். ஏனெனில் விருதுகளை அவர் மதிக்கவே மாட்டாராம்.
வாங்கிய உடனே அதை எங்காவது தூக்கி எறிந்து விடுவாராம். அதனால் அவரது வீட்டில் விருதுகளை பார்க்க முடியாது எனக் கூறப்படுகிறது. இது குறித்து பிரபலம் ஒருவர் ஒருமுறை நாகேஷிடம் கேட்ட பொழுது நான் நடிக்கும் திரைப்படங்களில் நகைச்சுவைகளை பார்த்து மக்கள் கைதட்டுகிறார்களே அதுதான் எனக்கு கிடைக்கும் உண்மையான விருது இதையெல்லாம் சும்மா வீட்டில் மாட்டி வைத்துக் கொள்ளலாம் அவ்வளவுதான் என்று கூறியிருக்கிறார் நாகேஷ்.
