500 ரூபாய்க்காக இந்தாளு என்னை ஏமாத்த பார்த்தார்.. சரத்குமார் படத்தில் கருணாஸ்க்கு நடந்த ஏமாற்றம்.. இப்படியா போட்டு உடைக்கிறது.!
Actor karunas: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நாட்டாமை திரைப்படம் 1994 ஆம் ஆண்டு வெளிவந்து தமிழ் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் நடிகராக சரத்குமார் மற்றும் மீனா, குஷ்பூ ஆகியோர் நடித்திருந்தனர்.
கிட்டத்தட்ட நூறு நாட்களுக்கு மேலாக ஓடி சாதனை படைத்தது நாட்டாமை திரைப்படம்.
நடிகர் கருணாஸ்
நடிகர் கருணாஸ் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், இசையமைப்பாளராகவும் மற்றும் பின்னணி பாடகராகவும் அறியப்பட்டவர்.
இவர் நடிகர் மட்டுமல்லாமல் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

இவர் நடித்த திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் இவர் பல படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.
ரகசியம் உடைத்த கருணாஸ்
தனது 12 வது வயதில் நாட்டுப்புற பாடராக பணிபுரிந்த கருணாஸ் பல பாடல்களைப் பாடியுள்ளார்.
இந்நிலையில் தான் சமீபத்தில் நடந்த “போகுமிடம் வெகு தூரம் இல்லை”பட ஆடியோ விழா ப்ரோமோஷனில் கருணாஸ் பேசும்பொழுது நாட்டாமை படத்தில் நான் தான், நாட்டாமை பாதம் பட்டால் என்ற பாடலை பாடினேன். ஆனால் அதற்கு கொடுக்க வேண்டிய 500 ரூபாய் கொடுக்காமல் வெறும் பேட்டா காசு ரூபாய் 100 மட்டும் கொடுத்து அனுப்பியதாகவும் கூறினார்.

மேலும் அவர் பேசும் பொழுது சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, இங்கு ஒருவருடைய திறமையை யாரும் எளிதாக புரிந்துக்கொள்ள மாட்டார்கள் என்று கூறினார்.