Connect with us

எம்.ஜி.ஆர்க்கிட்ட மல்லுக்கட்டுனா நடக்குமா!.. பிரபல நடிகையை அடிப்பணிய வைத்த எம்.ஜி.ஆர்!..

MGR banumathi

Cinema History

எம்.ஜி.ஆர்க்கிட்ட மல்லுக்கட்டுனா நடக்குமா!.. பிரபல நடிகையை அடிப்பணிய வைத்த எம்.ஜி.ஆர்!..

Social Media Bar

தமிழ் சினிமா நடிகர்களில் கருப்பு வெள்ளை காலம் முதல் இப்போது வரை மிகவும் பிரபலமான ஒரு நபராக இருந்து வருபவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அரசியலிலும் சரி தமிழ் சினிமாவிலும் சரி எம்.ஜி.ஆர்  தனது காலடி தடத்தை வலுவாக பதித்து இருக்கிறார்.

வெறும் படம் நடிப்பது என்று மட்டும் இல்லாமல் திரைப்படம் இயக்குவது தயாரிப்பது என்று பல துறைகளிலும் பணிபுரிந்து இருக்கிறார் எம்.ஜி.ஆர் ஒருமுறை சிவாஜி கணேசன் நடித்த உத்தமபுத்திரன் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆசைப்பட்டார் எம்.ஜி.ஆர்.

ஆனால் அந்தக் கதையை ஏற்கனவே ஸ்ரீதர் சிவாஜியை வைத்து எடுக்க திட்டமிட்டு இருந்ததால் வேறு ஒரு கதையை படமாக்கலாம் என்று எம்.ஜி.ஆர் சுற்றிக் கொண்டிருந்த பொழுது பிரபலமான ஆங்கில நாவல் ஒன்றின் கதையை படமாக்குவதற்கு அவருக்கு ஆசை வந்தது.

அதனை தொடர்ந்து அவரே இயக்கி நடிக்க நாடோடி மன்னன் திரைப்படம் என்னும் திரைப்படம் தயாராவதற்கு இருந்தது. ஆனால் அந்த படம் தயாராகும் முன் இன்னொரு பிரச்சனையும் இருந்தது. அது என்னவென்றால் நடிகை பானுமதியும் அந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் ஒன்றை எடுக்க இருந்தார்.

nadodi-mannan
nadodi-mannan

இந்த நிலையில் எம்.ஜி.ஆருக்கு போன் செய்த பானுமதி நான் அதே கதையை படமாக்க இருக்கிறேன். எனவே நீங்கள் வேறு கதையை படமாக்கிக் கொள்ளுங்கள் என கேட்டு இருக்கிறார். அதற்கு எம்.ஜி.ஆர் இல்லை இந்த கதையை வெகு நாட்களாக படமாக எடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசை எனவே என்னால் இந்த படத்தை விட முடியாது என்று கூறிவிட்டார் எம்ஜிஆர்.

 மேலும் இந்த படத்தில் நாவலில் ஒரு சின்ன பகுதியை தான் எனது திரைப்படத்தில் நான் பயன்படுத்த இருக்கிறேன் எனவே நீங்கள் அதை படமாக எடுப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என எம்.ஜி.ஆர் கூறிவிட்டார் இருந்தாலும் பிறகு யோசித்த பானுமதி அந்த திரைப்படத்தை கைவிட்டார்.

எம்.ஜி.ஆரே அந்த கதையை படமாக்கி கொள்ளட்டும் என்று கூறிவிட்டார் பானுமதி. இப்படி யாரிடமும் மிரட்டாமலும் கூட அன்பால் தனது விஷயங்களை சாதித்து இருக்கிறார் எம்ஜிஆர்.

To Top