News
பிரசாந்துக்கு லட்டு மாதிரி வந்த 2 படங்கள் போயிடுச்சு!.. உண்மையை கூறிய தியாகராஜன்
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் தற்போது உள்ள நடிகர் விஜய், அஜித்திற்கு போட்டியாக இருந்த ஒரு நடிகர் என்றால் அது பிரசாந்த் தான்.
தன்னுடைய அற்புதமான நடிப்பின் மூலம் பல ரசிகர்களை தன் வசப்படுத்திருந்த பிரசாந்த், ஒரு காலகட்டத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்தார். இந்நிலையில் மீண்டும் சினிமாவில் என்று கொடுத்திருக்கும் பிரசாந்த் பற்றி அவரின் அப்பா கூறியிருக்கும் தகவலானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் பிரசாந்த்
நடிகர் பிரசாந்த் இயக்குனரும், நடிகருமான தியாகராஜனின் மகன் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இவர் வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த திரைப்படம் இவருக்கு வெற்றி பெற்ற நிலையில் அதன் பிறகு நடித்த செம்பருத்தி மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஜீன்ஸ் திரைப்படம் ஜோடி, மஜ்னு, வின்னர் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இதற்கிடையில் பல மலையாள படங்கள், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வந்த பிரசாந்த், முன்னணி நடிகராகவும் வளர்ந்து கொண்டு இருந்த நேரத்தில் அவருடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது அவரின் அப்பா தான் அனைவராலும் பேசப்பட்டு வந்தது.
பிரசாந்த் சினிமாவை விட்டு விலகியதற்கும் காரணம் அவரின் அப்பா தான் என பலரும் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், பிரசாந்த் இது குறித்து சமீப காலங்களாக பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
நடிகர் பிரசாந்த் குறித்து தியாகராஜன் கூறியது
திருமணத்திற்குப் பிறகு பிரசாந்த் எந்த ஒரு திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. மேலும் திருமண வாழ்க்கை அவருக்கு பிரச்சனை ஏற்பட்ட நிலையில் தற்போது அவர் படங்களில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தியாகராஜன் பிரசாந் பற்றி கூறும் போது, இரண்டு முக்கிய பட வாய்ப்புகள் கிடைத்து. ஆனால் அந்த படத்தில் சில காரணங்களுக்காக அவர் நடிக்க முடியாமல் போய்விட்டது. ராஜன் மேனன் டைரக்ஷனில், தானு தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.

இந்த படத்தில் நடிகை தபுக்கு ஜோடியாக பிரசாந்த் நடிக்க இருந்தது. ஆனால் தபு பார்ப்பதற்கு வயதான பெண் போல் இருப்பாள் என்பதால், நான் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக கேட்டேன். ஆனால் அப்போது அவர்கள் முடியாது என்று கூறி விட்டார்கள்.
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த தீனா திரைப்படத்தில் முதலில் பிரசாந்த நடிப்பதாக இருந்தது. ஆனால் அப்போது பிரசாந்த் வேறொரு படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்ததால், நான் பத்து நாட்கள் டைம் கேட்டேன். ஆனால் அவர் உடனடியாக படப்பிடிப்பு தொடங்க வேண்டும் என கூறியதால், நடிகர் அஜித்தை வைத்து அவர் படத்தை எடுத்தார் என தியாகராஜன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
