Cinema History
நான் ரஜினிகாந்த் என்னை அவன் கூட எல்லாம் கம்பேர் பண்ணாத!.. இயக்குனருக்கு வார்னிங் கொடுத்த ரஜினி!.
நடுத்தர குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்து பெரும் உயரத்தை தொட்டவர் நடிகர் ரஜினிகாந்த். அப்போதைய காலக்கட்டத்தில் கிராமத்தில் இருக்கும் பலருக்கும் சினிமாவிற்கு சென்று அங்கு பெரிதாக சாதிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்து வந்தது.
அப்படியாகத்தான் ரஜினிகாந்தும் சினிமாவிற்கு வந்தார். ரஜினிகாந்தை பொறுத்தவரை அவர் கன்னட நடிகர் ராஜ்குமாரை பார்த்து அவரை போலவே சூப்பர் நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் அவருக்கு தமிழ் சினிமாவில்தான் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது.
ஆனால் தமிழ் சினிமாவிலும் தனக்கென தனி இடத்தை பிடித்துவிட்டார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் அண்ணாமலை அவருக்கு முக்கியமான திரைப்படமாகும். கமர்ஷியலாக அந்த திரைப்படம் அவருக்கு நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது.
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாதான் அண்ணாமலை திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படத்தை இயக்கும்போது ரஜினிகாந்தை பற்றி சுரேஷ் கிருஷ்ணாவிற்கு எதுவுமே தெரியாது. ஏனெனில் அவர் முழுக்க முழுக்க ஹிந்தி படங்களாகதான் பார்த்திருந்தார்.
படப்பிடிப்பில் நடந்த சம்பவம்:
இதனால் அண்ணாமலை திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்றுக் கொண்டிருந்தப்போது ஒவ்வொரு முறை ரஜினிகாந்த் நடிக்கும்போது அமிதாப் பச்சன் இங்கு இருந்திருந்தால் இந்த காட்சியை இப்படி நடித்திருப்பார் என்று தொடர்ந்து அமிதாப் பச்சனை புகழ்ந்து வந்துள்ளார் சுரேஷ் கிருஷ்ணா.
இதனை பார்த்த ரஜினிகாந்த் அவரை அழைத்து நான் அமிதாப்பச்சன் கிடையாது. நான் ரஜினிகாந்த், என்னால் என்ன செய்ய முடியுமோ அதைதான் செய்ய முடியும் என கூறியிருக்கிறார். இல்லை சார் நான் முழுக்க முழுக்க அமிதாப்பச்சனை பார்த்தே வளர்ந்தவன். அதனால்தான் என்னை அறியாமலே நான் அவரை ஒவ்வொரு காட்சியிலும் வைத்து பார்க்கிறேன் என கூறியுள்ளார் சுரேஷ் கிருஷ்ணா.
இப்படியெல்லாம் சின்ன சின்ன சண்டைகள் இருந்தாலும் கூட அண்ணாமலை திரைப்படத்திற்கு பிறகும் கூட வீரா, பாட்ஷா, பாபா என்று மூன்று படங்களை இவர்கள் கொடுத்துள்ளனர்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்