எது கிடைச்சாலும் தூக்கி வீசிட வேண்டியது!.. மீண்டும் மீண்டும் செய்த தப்பையே செய்யும் நடிகர் சிவக்குமார்!..

Actor Sivakumar: சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களாக அறிமுகமானவர்களில் முக்கியமானவர் நடிகர் சிவக்குமார், அப்போது ஜெய் சங்கரும், சிவக்குமாரும் இளம் நடிகர்களாக அறிமுகமானார்கள்.

அறிமுகமான காலத்திலேயே சிவக்குமாருக்கு கல்லூரி மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அடுத்த தலைமுறை நடிகர்களாக பலரும் அறிமுகமாகவே சிவக்குமாருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.

Social Media Bar

இதனால் சிவக்குமாருக்கு வாய்ப்புகள் என்பது இல்லாமல் போனது. இதை அவரே பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். முக்கியமாக கண்ணு பட போகுதய்யா திரைப்படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னப்போது மிகவும் வருத்தப்பட்டதாக கூறியுள்ளார் சிவக்குமார்.

சிவக்குமார் சர்ச்சை:

இந்த நிலையில் சிவக்குமார் தற்சமயம் பேசும் விஷயங்களும் அவரது செயல்களும் அதிக சர்ச்சையை ஏற்படுத்துபவையாக இருந்து வருகின்றன. இப்படிதான் ரசிகர் ஒருவர் ஒருமுறை செல்ஃபி எடுக்க வந்தப்போது அந்த செல்போனை தட்டி விட்டு சென்றார் சிவக்குமார். இதனையடுத்து அந்த செய்தி மிகவும் ட்ரெண்ட் ஆனது.

sivakumar
sivakumar

பலரும் இதுக்குறித்து நடிகர் சிவக்குமாரை கேலி செய்து வந்தனர். இந்த நிலையில் தற்சமயம் மீண்டும் அப்படியான ஒரு சம்பவத்தை செய்திருக்கிறார் சிவக்குமார். ரசிகர் ஒருவர் அவருக்கு பொன்னாடை போர்த்த வந்தப்போது அதை பிடுங்கி வீசி எறிந்துவிட்டு சென்றிருக்கிறார் சிவக்குமார்.

இதனையடுத்து மீண்டும் பலரும் சிவக்குமார் குறித்து விமர்சனம் அளித்து வருகின்றனர். அவர்தான் வீசி எறிகிறார் என தெரிகிறதே பிறகு எதற்கு தொடர்ந்து அவருக்கு மதிப்பு கொடுக்கிறீர்கள் என நெட்டிசன்கள் இதுக்குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.