News
ஒன் மோர் கேக்குறியான்னு அடிப்பாங்க! – வருத்ததுடன் பேசும் வடிவேலு!
தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் நடிகர்கள் அனைவருமே மிகவும் பண்பாளர்கள். மக்களிடம் நல்லப்படியாக நடந்துக்கொள்பவர்கள் என்பதே பெரும்பாலும் ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது. ஆனால் உண்மையில் சினிமாவிற்குள் அப்படி இருப்பதில்லை.

சினிமாவிற்குள் ஒருவர் ஆரம்பக்கட்டத்தில் போகும்போது அவரை வதைப்பதும் சினிமாவில் நடைப்பெறுகிறது. இதை குறித்து நடிகர் வடிவேலு தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
படங்களை எடுத்து முடித்த பிறகே அவற்றின் டப்பிங் வேலைகள் நடக்கும். இந்த மாதிரி டப்பிங் வேலைகள் நடக்கும்போது இயக்குனர்கள் அவர்களுக்கு பதிலாக உதவி இயக்குனர்களைதான் மேற்பார்வைக்கு நிற்க வைப்பார்கள். அப்போது எதாவது ஒரு முன்னணி நடிகர் பேசி அது சரியாக இல்லாவிட்டால் உடனே திரும்ப ரீ டேக் போக சொல்லி உதவி இயக்குனர் சொல்வதுண்டு. அப்படி சொல்லும்போது உடனே சில நடிகர்கள் உதவி இயக்குனர்களை அடித்துவிடுவார்கள் என வடிவேலு கூறுகிறார்.
நான் எவ்வளவு பெரிய ஆளு, என்னை நீ ரீடேக் பண்ண சொல்றியா! என கேட்பார்களாம். இப்போது மக்கள் பெரும் நடிகர் என நினைக்கும் பலரே இதை செய்திருக்கிறார்கள் என கூறுகிறார் வடிவேலு. ரீ டேக் என்பது சினிமாவில் இன்றியமையாத விஷயம், ஆனால் அதை கூட ஒரு உதவி இயக்குனர் சொல்ல கூடாது என பெரும் நடிகர்கள் நினைக்கின்றனர் என கூறியிருந்தார் வடிவேலு.
