நிஜ வாழ்க்கையில் எல்லோருமே பிச்சைக்காரன்தான்! – விஜய் ஆண்டனி சொன்ன பதில்!
தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் ஆண்டனி. சில கதாநாயகர்களை போல ஒரே விதமான கதைகளில் நடிக்காமல் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்க கூடியவர்.

இதனால் விஜய் ஆண்டனிக்கு என ஒரு ரசிக பட்டாளம் உருவாகியுள்ளது. தற்சமயம் இவர் பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்து வந்தார். இந்த படம் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வரும் என கூறப்படுகிறது. இந்த படத்தின் ஸ்னிக் பீக் வந்த நிலையில் மக்கள் மத்தியில் இதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
ஒரு பழைய பேட்டியில் பிச்சைக்காரன் திரைப்படத்தை குறித்து பேசி கொண்டிருந்தனர். அப்போது விஜய் ஆண்டனியிடம் முதல் படத்திற்கு வாய்ப்பு கிடைத்ததை பற்றி கேட்டனர். அப்போது விஜய் ஆண்டனி அதற்கு பதிலளிக்கும்போது “உண்மையில் அனைவருமே இங்கு பிச்சைக்காரர்கள் தான். பிச்சைக்காரர்கள் காசை மட்டும் பிச்சை எடுக்கின்றனர். நாம் நம் வாழ்வில் காசை போல வேறு எதாவது விஷயத்தை பிச்சை எடுக்கிறோம்.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் நான் என்னுடைய முதல் வாய்ப்பிற்காக படத்தின் இயக்குனரிடம் இரவு பகலாக பிச்சை எடுத்தேன். எப்போதும் அவர் வீட்டு வாசலில் காத்து கிடந்தேன்.” என கூறியுள்ளார் விஜய் ஆண்டனி.