Connect with us

அவனால மன உளைச்சலுக்கு உள்ளாகிட்டேங்க நான்!.. விஜய்யை வெறுப்பேற்றிய இயக்குனர்!..

News

அவனால மன உளைச்சலுக்கு உள்ளாகிட்டேங்க நான்!.. விஜய்யை வெறுப்பேற்றிய இயக்குனர்!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் விஜய். தற்சமயம் வளர்ந்து வரும் நடிகராக இருந்த போதும் கூட விஜய் தொடர்ந்து சினிமாவை விட்டு விலகுவதற்குதான் முடிவு செய்து இருக்கிறார். அடுத்து அரசியலில் தன்னுடைய வளர்ச்சியை நோக்கி பயணிக்க இருக்கிறார் விஜய்.

விஜய் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் பெரும்பாலும் வெற்றி படங்களாக அமைவதால் அவரது திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே பெரிய மார்க்கெட் உண்டு. இதனால் விஜய் சினிமாவை விட்டு செல்வது என்பது பெரும் தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்க முதலாளிகளுக்கும் அதிக வருத்தத்தை அளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது.

இன்னும் இரண்டு படங்கள்:

இந்த நிலையில் இன்னும் இரண்டு திரைப்படங்களில் விஜய் நடிப்பார் என்று கூறப்படுகிறது. அந்த இரண்டு திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. தற்சமயம் அவரது நடிப்பில் கோட் திரைப்படம் தயாராகி வருகிறது.

thalapathy-vijay1
thalapathy-vijay1

அதற்கு பிறகு இன்னும் ஒரு படத்தில் அவர் நடிப்பார் என்று கூறப்படுகிறது விஜய் நடித்த திரைப்படங்களில் சமீபகாலமாக அவருக்கு அதிக வெற்றியை பெற்று கொடுத்தது லோகேஷ் கனகராஜின் திரைப்படங்கள்தான் லோகேஷ் கனகராஜ் திரைப்பட அனுபவம் குறித்து மாஸ்டர் பட வெளியீட்டு விழாவில் விஜய் பேசியிருந்தார்.

மாஸ்டர் பட அனுபவம்:

அதில் பேசும்போது சில சுவாரசியமான விஷயங்களை கூறியிருந்தார் அதாவது படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பொழுது லோகேஷ் கனகராஜ் அங்கு ஸ்கிரிப்ட் பேப்பரை வைத்துக் கொள்ளாமல் படபிடிப்பை துவங்கியிருந்தாராம். அவர் விஜயை அழைத்து இந்த மாதிரி அவரிடம் போய் நீங்கள் இந்த மாதிரி பேச வேண்டும் என்று விவரித்து இருக்கிறார்.

அந்த மாதிரி கூறியதும் நான் மன உளைச்சலுக்கு உள்ளாகிவிட்டேன் செம கடுப்பாகி விட்டேன் அப்பொழுது படபிடிப்பை விட்டு கிளம்பி விடலாம் என்று யோசித்தேன் இவனை வைத்து எப்படி நான்கு மாதம் படத்தில் நடிப்பது என்றும் யோசித்தேன் என்கிறார் விஜய். பிறகு லோகேஷ் கனகராஜை அழைத்து இப்படி எல்லாம் சொன்னால் வேலைக்கு ஆகாது. ஸ்கிரிப்ட் ரெடி செய்து எல்லாருக்கும் ஒரு பேப்பரை கொடு என்று கூறினேன் என்கிறார் விஜய்.

ஆனால் தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜிற்கு முன்பே ஸ்கிரிப்ட் பேப்பரே இல்லாமல் திரைப்படம் எடுத்த இயக்குனர்கள் பலர் உண்டு அதே பாணியைதான் லோகேஷ் கனகராஜும் பின்பற்றி இருக்கிறார் ஆனால் விஜய்க்கு அது புதிதாக இருந்திருக்கிறது.

To Top