Connect with us

எங்க அளவுக்கு எல்லாம் இப்ப சினிமால யாரும் கஷ்டப்பட்டு வரல! –  சத்யராஜூடன் அனுபவங்களை பகிரும் விஜயகாந்த்!

Cinema History

எங்க அளவுக்கு எல்லாம் இப்ப சினிமால யாரும் கஷ்டப்பட்டு வரல! –  சத்யராஜூடன் அனுபவங்களை பகிரும் விஜயகாந்த்!

Social Media Bar

ஆரம்பக்காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவில் பலர் அதிர்ஷ்டத்தில் வாய்ப்புகளை பெற்று வந்தாலும் கதாநாயகனாக வாய்ப்பு தேடி அலைந்தவர்கள் பலர் இருக்கின்றனர்.

அப்படியான ஆட்களில் நடிகர் விஜயக்காந்தும் ஒருவர். விஜயகாந்தும் நடிகர் சத்யராஜூம் ஒரே நேரத்தில் சினிமாவிற்கு வந்தவர்கள். இருவருமே சாதரணமாக வாய்ப்புகளை பெற்றுவிடவில்லை. ஒரே சமயத்தில் இருவரும் வாய்ப்பு தேடி அலைந்த அனுபவங்களை விஜயகாந்த் பகிர்ந்துள்ளார்.

அப்போதெல்லாம் வாய்ப்பு தேடி சென்றாலே எதாவது ஒரு படத்தில் வரும் வசனத்தை அப்படியே பேச வேண்டும். உதாரணமாக வீரப்பாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் வரும் வசனத்தை பேச வேண்டும் என கூறினால் அந்த வசனத்தை அப்படியே பேச வேண்டும்.

எனவே பல படங்களின் வசனத்தை மனதில் மனப்பாடமாக வைத்திருக்க வேண்டும். இப்படி பல நேர்க்காணல்களில் ஒன்றாக ஏறி இறங்கி பல வசனங்களை பேசியும் வாய்ப்புகள் கிடைக்காமல் ரொம்ப அரிதாகவே இருவரும் சினிமாவில் வாய்ப்புகளை பெற்று வந்தனர்.

அதிலும் விஜயகாந்திற்காவது கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் சத்யராஜ்க்கு எடுத்ததும் வில்லனாக நடிக்கவே வாய்ப்புகள் கிடைத்தன. அதன் பிறகே கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன.

இந்த அனுபவங்களை எல்லாம் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் விஜயகாந்த்.

To Top