Tamil Cinema News
திருமாவளவன் எனக்காக ஒரு படம் எடுக்கணும்… விஜயகாந்திற்கு இருந்த ஆசை!..
தமிழில் வரிசையாக ஹிட் கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் பல அப்போது பெரும் வெற்றி கொடுத்தன. இதனால் வருடத்திற்கு 18 படங்கள் வரை எல்லாம் நடித்திருக்கிறார் விஜயகாந்த்.
சொல்ல போனால் தமிழ் சினிமாவிலேயே ஒரு வருடத்தில் அதிகமான திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் விஜயகாந்த்தான். விஜயகாந்த் திரைத்துறையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் பக்கம் வந்தார்.
அரசியலுக்கு வந்த பிறகு சமூகத்திற்கு நல்ல நல்ல கருத்துக்களை சொல்லும் விதமான கதைகளில் தொடர்ந்து நடித்து வந்தார். அப்படி அவர் நடித்த திரைப்படங்களில் ரமணா, தென்னவன், நரசிம்மா போன்ற படங்கள் நல்ல வெற்றியை பெற்றது.

பிறகு முழுவதுமாக தன்னை அரசியலில் ஈடுபடுத்திக்கொண்டார் விஜயகாந்த். இதனால் பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்கவே இல்லை. இந்த நிலையில் ஒருமுறை பேசும்போது திருமாவளவன் என்னை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும். அதில் நாட்டின் ஊழல்கள் குறித்து மிக வெளிப்படையாக படத்தை எடுக்க வேண்டும்.
அப்படி அவர் ஒரு படத்தை இயக்கினால் கண்டிப்பாக அதில் நான் நடிப்பேன் என கூறியுள்ளார் விஜயகாந்த். ஆனால் அதற்கு பிறகு விஜயகாந்தின் உடல்நிலை மோசமானதால் அவரால் திரைப்படங்களில் நடிக்க முடியவில்லை.
