Tamil Cinema News
படுக்கையறை காட்சியில் நடிக்கும்போது அப்படி இருந்துச்சு.. ரகசியம் உடைத்த அஞ்சலி!
Actress Anjali: தமிழ் சினிமாவில் ஒரு நடிகை நீண்ட காலம் சாதிப்பது என்பது மிகப்பெரிய விஷயம். அந்த வகையில் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையென்றால், சினிமா வாய்ப்புகள் கிடைப்பது என்பது சிக்கலாகிவிடும்.
ஆரம்பத்தில் நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை என்றால், அதன் பிறகு வரும் வாய்ப்புகளும் குறைந்து கொண்டே போகும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட நடிகை என்றால் அஞ்சலி. அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்ட தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை அஞ்சலி
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட அஞ்சலி அங்கு பள்ளி படிப்பை முடித்தார். மேலும் கல்லூரி படிப்பை தொடர்வதற்காக சென்னை வந்து தன்னுடைய கல்வியை முடித்தார். அதன் பிறகு சிறு சிறு குறும்படங்களில் நடிக்க தொடங்கினார். குறும்படங்களில் நடித்ததன் மூலம் விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதனை வைத்து தெலுங்கில் இரண்டு சிறிய திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும் 2007 ஆம் ஆண்டு கற்றது தமிழ் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருப்பார். தென்னிந்திய சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை இவர் பெற்றார்.
மேலும் கடந்த 2010ல் வெளிவந்த அங்காடித் தெரு என்ற திரைப்படம் நடிகை அஞ்சலிக்கு திருப்புமுனையாக அமைந்தது. மேலும் இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை இவர் பெற்றார்.
மனம் திறந்து பேசிய அஞ்சலி
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அஞ்சலி “பஹிஷ்கரனா” என்ற சீரியஸில் நடித்த போது ஏற்பட்ட அனுபவத்தை பற்றி தற்பொழுது பகிர்ந்திருக்கிறார். அஞ்சலி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த “பஹிஷ்கரனா” சீரிஸ் ஓ.டி.டியில் ஜூலை 19ஆம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருந்தது. இதனை தொடர்ந்து, இப்படத்தில் அஞ்சலி, ரவீந்திர விஜய், ஸ்ரீதேஜ், அனன்யா நாகல்லா, சண்முக், மஹ்பூப் பாஷா மற்றும் சைதன்யா சாகிராஜு உள்ளிட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

இந்தத் திரைப்படம் 90ஸ்களில் கிராமப்புற குண்டூரின் விபச்சாரியாக வாழும் நாயகி மற்றும் அவரின் உண்மையான வரலாற்றை விளக்கும் படமாக உருவாகியுள்ளது.
மேலும் இந்த படத்தில் அஞ்சலியின் நடிப்பு இதுவரை யாரும் பார்த்திடாத ஒரு அட்டகாசமான நடிப்பினை தந்துள்ளார் எனவும், Pixel Pictures Pvt Ltd சார்பில் தயாரிப்பாளர் பிரசாந்தி மாலிசெட்டி குறிப்பிடுகையில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில்தான் நடிகை அஞ்சலி “பஹிஷ்கரனா” தொடரில் நடிக்கும் பொழுது எடுக்கப்பட்ட நெருக்கமான காட்சிகளில் எவ்வாறு உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த “பஹிஷ்கரனா” வெப் தொடரில் நெருக்கமான காட்சிகள் நடிக்க வேண்டியதாக இருந்தது. எனவே எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டு அந்த காட்சியை படமாக்கினர். மேலும் அந்த காட்சியில் நடிக்கும் பொழுது டென்ஷனாகவும், கூச்சமாகவும் இருந்ததாக அஞ்சலி பேசி உள்ளார்.
