Tamil Cinema News
விஜய் அரசியலுக்கு வந்தது எனக்கு? நடிகை பாவனா வெளியிட்ட கருத்து..!
ஒரு காலகட்டத்தில் தமிழில் தொடர்ந்து வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்தவர் நடிகை பாவனா. அவர் ஏன் தமிழ் சினிமாவில் நடிக்காமல் போனார் என்பது யாருக்குமே தெரியாத விஷயமாக இருந்து வருகிறது.
தமிழில் அவர் நடித்த ஜெயம்கொண்டான், தீபாவளி மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் அப்பொழுது நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் அஜித் நடித்த அசல் திரைப்படத்தில் கூட அவரது ஜோடியாக நடித்திருந்தார் பாவனா.
இந்த நிலையில் மலையாளத்தில் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார் பாவனா. சமீபத்தில் அவர் சென்னைக்கு வந்திருந்தார் அப்பொழுது அவரிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டது. அதே சமயம் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பாவனா கூறும் பொழுது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது வரவேற்கத்தக்க ஒரு விஷயமாகும் என்று கூறி இருந்தார்.
விஜய் குறித்து பாவனா:
அவர் தற்சமயம் வெற்றிகரமாக மாநாடுகளை நடத்தி இருக்கிறார் அது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று பாவனாவிடம் கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த பாவனா விஜயின் அரசியல் விஷயங்கள் குறித்து எனக்கு பெரிதாக தெரியாது.
ஆனால் அவர் அரசியலுக்கு வருவது என்பது நல்ல விஷயம் தான் என்று கூறியிருக்கிறார். நீங்கள் அவருக்கு ஆதரவாக இருப்பீர்களா? என்று பாவனா விடம் கேட்ட பொழுது நான் கேரளாவில் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். நான் எப்படி அவருக்கு தமிழ்நாட்டில் ஆதரவாக இருக்க முடியும் என்று பாவனா கேட்டிருந்தார்.
மேலும் படம் அப்டேட்கள் குறித்து கூறும் பொழுது தற்சமயம் எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் நடிக்கவில்லை ஏதாவது ஒரு நல்ல கேரக்டர் கிடைத்தால் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார் பாவனா.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்