Actress
நீங்க அதை பண்ணுனாலே தமிழ் பசங்களுக்கு பிடிச்சிடும்.. கயடுவை பார்த்து தமிழ் நடிகைகள் கத்துக்கணும்.!
தமிழ் சினிமா வட்டாரத்தில் இப்போது அதிகமாக பேசப்பட்டு வரும் நடிகையாக இருந்து வருபவர் நடிகை கயடு லோகர். இவர் தமிழில் டிராகன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அடுத்து அதர்வா நடித்து வரும் இதயம் முரளி திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
டிராகன் திரைப்படத்தில் பயங்கர மாடர்ன் லுக்கில் நடித்திருந்தார் கயடு. அவருக்கு அது அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது. தொடர்ந்து தமிழில் இவர் அதிக வாய்ப்புகளை பெற துவங்கியுள்ளார். அடுத்து சினிமாவில் இவர் நயன் தாராவை இடத்தை பிடிக்கவும் வாய்ப்புள்ளது என பேச்சுக்கள் இருக்கின்றன.
இந்த நிலையில் தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்த நடிகைகள் கூட கொஞ்சம் பிரபலமான பிறகு தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசுவார்கள். அல்லது தமிழில் ஆங்கிலத்தை கலந்து பேசுவார்கள். சாய் பல்லவி மாதிரி ஒரு சில நடிகைகள் மட்டுமே தெளிவான தமிழில் பேசுவதை பார்க்க முடியும்.
இந்த நிலையில் கயடு லோகர் தமிழ் நடிகை கிடையாது. அவர் முதலில் நடிக்கும் படமே டிராகன் திரைப்படம்தான். அப்படி இருந்தும் கூட டிராகன் திரைப்பட விழாவில் பேசிய கயடு தமிழில் டயலாக்குகளை மனப்பாடம் செய்துக்கொண்டு வந்து தமிழில் பேசினார்.
இதுக்குறித்து அதே மேடையில் பேசிய டிராகன் திரைப்படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து கூறும்போது, “கயடு மேடையில் ஏறுவதற்கு முன்பு தமிழில் எனக்கு சரியாக பேச வருமா? என தெரியவில்லை. பேசவா? வேண்டாமா? என கேட்டார். நீங்கள் பேசுங்கள் அது போதும். தவறாக பேசினாலும் நீங்கள் பேச முயற்சி செய்ததற்கே தமிழ் பசங்களுக்கு உங்களை பிடித்துவிடும் என கூறினேன்” என்று கூறியுள்ளார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து.
