Connect with us

ராகவா லாரன்சை துப்பாக்கி முனையில் பயமுறுத்திய நடிகை!.. இது வேற நடந்துச்சா…

chandramukhi 2 ragava lawarance

Tamil Cinema News

ராகவா லாரன்சை துப்பாக்கி முனையில் பயமுறுத்திய நடிகை!.. இது வேற நடந்துச்சா…

Social Media Bar

தமிழ் சினிமாவில் நடன கலைஞராக அறிமுகமாகி அதன் பிறகு நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து தற்சமயம் கதாநாயகன், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்தன்மையோடு வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.

தமிழில் இவர் எடுத்த முனி மற்றும் அதனை தொடர்ந்து வந்த பேய் படங்கள் அனைத்தும் நல்ல வெற்றியை கொடுத்தன. அதனை தொடர்ந்து படங்களை இயக்குவதில் கவனம் செலுத்த துவங்கினார். ராகவா லாரன்ஸ் நடிகர் ரஜினியின் மீது பெரும் பற்று கொண்டவர்.

தற்சமயம் இவர் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார் இந்தப் படத்தில் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் என்கிற படத்தில் நடித்திருந்தார்.

கொஞ்சம் பெரும் பாலிவுட் நடிகை என்பதால் அவருடன் எப்போதும் துப்பாக்கியுடன் கூடிய செக்யூரிட்டிகள் இருப்பார்களாம். இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் அவரிடம் சென்று பேசுவதற்கே பயந்துள்ளார் ஒருமுறை கங்கனாவை சந்தித்த ராகவா லாரன்ஸ் படப்பிடிப்பில் இருப்பது போலவே எனக்கு இல்லை மேடம் ஏதோ ஆப்கானிஸ்தானில் இருப்பது போல தோன்றுகிறது.

உங்கள் துப்பாக்கி வீரர்களை மற்றும் கொஞ்சம் நகர சொல்கிறீர்களா என்று கேட்டுள்ளார். அதன் பிறகுதான் லாரன்ஸ் கங்கனா ரனாவத்திடம் கொஞ்சம் சகஜமாக பேசவே தொடங்கினார். அந்த அளவிற்கு கெடுப்புடியான பாதுகாப்புடன் கூடிய நடிகையாக இருந்துள்ளார். அதேபோல நடிகை நயன்தாராவை விடவும் அதிக சம்பளம் பெற்று தான் சந்திரமுகி 2வில் நடித்துள்ளார் கங்கனா ரனாவத்.

To Top