கல்யாணத்துக்கு 2 நாள் முன்னாடி அதை எனக்காக செஞ்சாங்க மீனா!.. வெளிப்படையாக கூறிய சேரன்!..
தமிழில் குடும்ப திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் நடிகரும் இயக்குனருமான சேரனுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. நடிகராகவும் இயக்குனராகவும் தமிழில் நிறைய திரைப்படங்களை உருவாக்கி இருக்கிறார் சேரன்.
அதில் தவமாய் தவமிருந்து ஆட்டோகிராப் போன்ற அவரது திரைப்படங்கள் பிரபலமானவை, சேரன் இயக்கிய மற்றொரு அழகிய திரைப்படம் பொக்கிஷம். கடிதங்களை வைத்து காதலை சொல்லும் அந்த திரைப்படம். அது வந்த காலகட்டத்தில் வெகுவாக பேசப்பட்டது.
கிட்டத்தட்ட இருவரும் நேரில் சந்தித்துக் கொள்ளாமலே கடிதம் வழியாக காதலித்துக் கொண்டிருப்பார்கள். அந்த கடிதத்தை பொக்கிஷம் என்று கூறிதான் படத்திற்கும் பொக்கிஷம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதில் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடிக்கும் பெண்ணிற்கு அவ்வளவாக தமிழ் சரியாக வரவில்லை.

எனவே அழகிய தமிழ் பேசும் ஒரு பெண் கண்டிப்பாக இந்த படத்திற்கு டப்பிங் செய்தாக வேண்டும் ஏனெனில் கடித போக்குவரத்து தொடர்பான படம் என்பதால் குரலுக்கு இந்த படத்தில் முக்கியத்துவம் இருந்தது. எனவே யாரை டப்பிங் செய்ய வைக்கலாம் என யோசித்த சேரனுக்கு மீனாவின் நினைவு வந்தது.
நடிகை மீனா கொஞ்சும் தமிழில் பேசக்கூடியவர். ஆனால் பிரச்சனை என்னவென்றால் இன்னும் இரண்டு நாட்களில் அவருக்கு திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் அவரை டப்பிங் பேச கூப்பிட்டால் வருவாரா என்கிற சந்தேகம் சேரனுக்கு இருந்தது.

இந்த நிலையில் மீனாவிடம் போன் செய்து இது பற்றி பேசினார். ஆனால் சற்றும் தயங்காத மீனா நாளையே வந்து நான் டப்பிங் செய்து தருகிறேன் என்று கூறியுள்ளார். இந்த விஷயத்தை சேரன் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார். எந்த ஒரு நடிகையும் திருமணத்திற்கு இரு நாட்களுக்கு முன்பு வேலை சொன்னால் செய்ய வர மாட்டார்கள் அது எனக்காக அதை செய்தார் மீனா என்று அவர் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.