Connect with us

அப்படி நடக்கலைனா தற்கொலையே செய்திருப்பேன்!.. மும்தாஜின் திடீர் மனமாற்றத்திற்கு இதுதான் காரணமாம்!..

actress mumtaj

News

அப்படி நடக்கலைனா தற்கொலையே செய்திருப்பேன்!.. மும்தாஜின் திடீர் மனமாற்றத்திற்கு இதுதான் காரணமாம்!..

Social Media Bar

1999 இல் டி.ராஜேந்தர் இயக்கிய மோனிசா என் மோனாலிசா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மும்தாஜ். முதல் திரைப்படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றார் மும்தாஜ்.

அதனை தொடர்ந்து மலபார் போலீஸ், உனக்காக எல்லாம் உனக்காக, குஷி மாதிரியான திரைப்படங்களில் நடித்தார் மும்தாஜ். கவர்ச்சி நடிகையாக அவருக்கு நல்ல விதமான வரவேற்பு இருந்தது என்றாலும் சில காலங்களுக்கு பிறகு மும்தாஜை தமிழ் சினிமாவில் காண முடியவில்லை.

2005 ஆம் ஆண்டு லண்டன் திரைப்படத்தில் நடித்தப்பிறகு அவருக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார் மும்தாஜ். இதுக்குறித்து மும்தாஜ் கூறும்போது உடல் நல குறைவின் காரணமாகதான் சினிமாவை விட்டு சென்றதாக கூறியிருந்தார்.

மும்தாஜிக்கு வந்த பிரச்சனை:

ஒரு நாள் அவருக்கு தனது இடுப்பு பகுதியையே நகர்த்த முடியாத அளவுக்கு கடுமையான வலி ஏற்பட்டது. இந்த வலியை அடுத்து நான் மருத்துவரை சென்று சந்தித்தேன். ஆனால் பிரபலமான மருத்துவர்களுக்கே எனக்கு என்ன பாதிப்பு என்று தெரியவில்லை.

இதனை தொடர்ந்து 2 வருடங்கள் கழித்து ஆட்டோ இம்யூன் என்னும் நோயால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன் என மருத்துவர்கள் கண்டுப்பிடித்தனர். அந்த நோயால் எனது எலும்பின் ஜாயிண்டுகளில் எல்லாம் வலி ஏற்பட்டது. சம்பந்தமே இல்லாமல் எனக்கு அடிக்கடி அழுகையும் வரும். இதெல்லாம் எனக்கு அந்த நோயால் ஏற்பட்ட விஷயமாக இருந்தது.

இந்த நிலையில் அதிக மன அழுத்தத்திற்கு நான் உள்ளேன். அந்த சமயத்தில் என்னை என் அண்னனும் கடவுளும்தான் காப்பாற்றினார்கள் என்கிறார் மும்தாஜ்.

Articles

parle g
madampatty rangaraj
To Top