இதை நானே முடிச்சி வைக்கிறேன்.. லீக் வீடியோ குறித்து ஓவியா எடுத்த முடிவு.!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருந்தவர் நடிகை ஓவியா. ஆரம்பத்தில் நிறைய வாய்ப்புகளை பெற்று நடித்து வந்த ஓவியாவிற்கு பிறகு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது.
இருந்தாலும் இப்போது வரை தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்று நடிப்பதற்கான வேலைகளில்தான் ஓவியா இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஓவியாவின் வீடியோ என்று கூறி ஒரு வீடியோ அதிக வைரலாக தொடங்கியது.
அந்த ஆபாச வீடியோவில் இருப்பவர் ஓவியாதான் என்று நெட்டிசன்கள் பரப்பி வந்தனர். ஆனால் அதில் இருப்பது ஓவியா இல்லை என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் வைரலான அந்த வீடியோ குறித்து ரசிகர்கள் ஓவியாவிடம் கேள்விகள் கேட்க துவங்கியுள்ளனர்.
ஓவியாவின் முடிவு:
அந்த கேள்விகளை எல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாத ஓவியா அதற்கு ஜாலியாக பதில் அளித்து இருந்தார். இந்த நிலையில் அடுத்த நடவடிக்கையாக ஓவியா என்ன செய்யப் போகிறார் என்பதுதான் கேள்வியாக இருந்தது.

தற்சமயம் காவல் நிலையத்தில் இது குறித்து கேஸ் கொடுத்து இருக்கிறார் ஓவியா. தன்னை பற்றி வதந்தி வீடியோ ஒன்றை பரப்பி இருக்கின்றனர் அதில் இருப்பது நான் கிடையாது ஆனாலும் அதில் இருப்பது நான்தான் என்று மக்கள் சொல்வதால் அதைக் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று போலீசாரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார் ஓவியா.