Latest News
கோழைகள்தான் இப்படி செய்வாங்க.. மோகன்லாலை நேரடியாக அட்டாக் செய்த நடிகை பார்வதி!.
மலையாள சினிமாவை அதிர செய்திருக்கும் கேரளா கமிட்டியின் அறிக்கையினால் பல எதிர்பாராத திருப்பங்கள் மலையாள சினிமாவில் அரங்கேறி வருகிறது.
மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு ஏற்படும் அட்ஜஸ்ட்மென்ட் போன்ற பல வன்முறைகளுக்கு முடிவு கட்டும் விதமாக கேரளா அரசு ஓய்வு பெற்று நீதிபதியின் தலைமையின் கீழ் ஒரு கமிட்டி ஒன்றை அமைத்து அதன் மூலம் குற்றங்களை பதிவு செய்து வந்தது.
இந்நிலையில் ஹேமா கமிட்டியின் மூலம் வெளிவந்திருக்கும் தகவலின் படி மலையாள சினிமாவில் இருக்கும் பல முக்கிய பிரபலங்கள் சிக்கியிருப்பது மற்ற சினிமா துறையும் அதிர்ச்சடைய செய்திருக்கிறது.
இந்நிலையில் மலையாள நடிகர் சங்கத்திலிருந்து மோகன்லால் விலகியது குறித்து நடிகை பார்வதி தன்னுடைய கோபமான பதிவை கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் சங்கத்தில் இருந்து விலகிய மோகன்லால்
மலையாள சினிமா மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் மோகன்லால். தமிழில் விஜய்யுடன் ஜில்லா படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்ட நடிகராக இருக்கும் இவர், மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவர் மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பில் முக்கிய பதிவியில் வகித்து வருகிறார். ஹேமா கமிட்டியின் மூலம் பல நடிகைகளும் பல பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுகளை அடிக்கி வரும் நிலையில் ஒவ்வொருவராக முக்கிய பொறுப்பில் இருந்து விலகி வருகிறார்கள். தற்போது மோகன்லால் பெயர் வெளிவராத நிலையிலும் அவர் அம்மா அமைப்பிலிருந்து வெளியேறி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
நடிகை பார்வதியின் காட்டமான பதில்
இவ்வாறான பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் நடிகர் சங்கம் தான் முன்னின்று அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும் என பல நடிகர், நடிகைகளும் கருத்து தெரிவித்து வரும் வேளையில், அம்மா அமைப்பிலிருந்து மோகன்லால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா செய்வது கோழைத்தனமான செயல் என நடிகை பார்வதி தெரிவித்திருப்பது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மலையாள சினிமாவில் இருக்கும் முக்கிய நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் எழுந்து வந்த நிலையில் மலையாள திரைப்பட கலைஞர் சங்கமான அம்மா அமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லா் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் செயற்குழு உறுப்பினர்கள் என அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய பார்வதி, மோகன்லால் சங்கத்திலிருந்து விலக செய்தியை கேட்டவுடன் என்ன இது கோழைத்தனமான செயல் என்று தான் நான் நினைத்தேன். இதை விளக்க வேண்டிய இடத்தில் ஊடகங்கள் இருக்கிறது. இதை
சுமர்ந்து செல்லும் பொறுப்பு பெண்களிடமே வந்திருக்கிறது எனவும் அவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்