Tamil Cinema News
நான் அப்படி சொன்னது தப்புதான்.. ரசிகர்களிடம் பகீரங்கமாக மன்னிப்பு கேட்ட பூஜா ஹெக்தே..!
தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் கூட ஆரம்பத்தில் தமிழில் வரவேற்பு கிடைக்காத ஒரு நடிகையாக இருந்தவர்தான் நடிகை பூஜா ஹெக்தே. 2012 ஆம் ஆண்டு வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் பூஜா ஹெக்தே.
ஜீவா நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதனை தொடர்ந்து பூஜா ஹெக்தேவிற்கும் தமிழில் பெரிதாக வரவேற்பு இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில் அடுத்ததாக தெலுங்கில் நடிக்க துவங்கினார் பூஜா ஹெக்தே.
தெலுங்கு சினிமாவில் பூஜா ஹெக்தே நடித்த திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து தெலுங்கில் பிரபல நடிகையாக மாறினார் பூஜா ஹெக்தே. பிறகு வெகு நாட்கள் கழித்து பூஜா ஹெக்தே தமிழில் பீஸ்ட் திரைப்படம் மூலமாக ரீ எண்ட்ரி கொடுத்தார்.
இப்போது தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வரும் பூஜா ஹெக்தே தமிழில் சூர்யா நடிக்கும் ரெட்ரோ, விஜய் நடிக்கும் ஜனநாயகன் மற்றும் லாரன்ஸ் நடிக்கும் காஞ்சனா 4 ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசும்போது அல வைகுந்தபுரம் திரைப்படம் தமிழில் அவருக்கு வரவேற்பை பெற்று தந்தது என்றும், அதை தமிழ் படம் என்றும் பேசியிருந்தார். இந்த பேச்சுதான் சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அல வைகுந்தபுரம் ஒரு தெலுங்கு படமாகும். ஆனால் தமிழிலும் அந்த படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. ஆனால் பூஜா ஹெக்தே அதை தவறாக தமிழ் படம் என்றே கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த தெலுங்கு ரசிகர்கள் நடிக்கும் படம் தமிழ் படமா? தெலுங்கு படமா? என்று கூட தெரியாதா என கேள்வி எழுப்ப துவங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இதற்காக மன்னிப்பு கேட்ட பூஜா ஹெக்தே தெரியாமல் அப்படி சொல்லிவிட்டேன். என்னை எப்போதும் வாழ வைத்தது தெலுங்கு சினிமாதான், எனவே அதை எங்கேயும் நான் குறைத்து கூற மாட்டேன் என அவர் கூறியுள்ளார்.
