Gossips
அம்மா நடிகையை படுக்கைக்கு அழைத்த நடிகர்.. விட மாட்டாங்க போல!.
Pragathi: சினிமா என்றாலே எப்பொழுதும் சர்ச்சைகளுக்கும், வதந்திகளுக்கும் பஞ்சம் இருக்காது. மேலும் ஒரு சில நடிகைகள் சினிமா துறையில் சாதித்த பிறகு அவர்கள் ஒரு சில பேட்டிகளில் சினிமாவில் தாங்கள் அனுபவித்து வந்த கஷ்டங்கள், நஷ்டங்கள் அனைத்தையும் தெரிவித்திருப்பார்கள்.
மேலும் ஒரு சில நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்கள் என நடிகைகளிடம் எவ்வாறு நடந்து கொண்டார்கள் போன்றவற்றை பேட்டிகளில் அவர்களின் பெயர்களை குறிப்பிடாமல் சொல்லி வருவது வழக்கம் தான்.
அதுபோல ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. சினிமாவில் தற்பொழுது ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வரும் ஒரு நடிகையை பிரபல நடிகர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது பற்றி அவரே மனம் திறந்து பேசி இருக்கிறார். அதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பிரகதி
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்திருக்கிறார். மேலும் இவர் சின்னத்திரையிலும் அறியப்படும் முக்கியமான நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் முதன் முதலில் மைசூர் சில்க் பேலஸ் விளம்பரத்தின் மூலம் அனைவரின் மத்தியிலும் பிரபலமானார். அதன் பிறகு பாக்யராஜ் படத்தில் வீட்ல விசேஷங்க என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் ஒரே நேரத்தில் ஏழு படங்களில் அதாவது தமிழ் படம் மற்றும் ஒரு மலையாள படத்தில் நடித்து சாதனை புரிந்தார்.

பிறகு திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு தள்ளி இருந்த நடிகை பிரகதி அதன் பிறகு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வந்தார்.
பிரகதி உடைத்த ரகசியம்
தற்பொழுது படங்களில் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வரும் பிரகதி அண்மையில் ஒரு பேட்டியில் தனக்கு நடந்த சம்பவத்தை பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்
தன்னுடன் நடிக்கும் சக காமெடி நடிகர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், ஆனால் இதனைப் பற்றி நான் யாரிடமும் சொல்லாமல் அந்த நடிகரை மட்டும் படப்பிடிப்பு முடிந்த பிறகு கேரவனுக்கு தனியாக வரச் சொன்னேன்.

நான் அவரிடம் உங்களை இது போன்ற சிந்தனையில் தூண்டக்கூடிய வகையில் நான் ஏதாவது உங்களுக்கு சைகை செய்தேனா? அல்லது என்னுடைய பாடி லாங்குவேஜ் அவ்வாறு உங்களுக்கு தெரிந்ததா? ஏன் உங்களுக்கு இவ்வாறு எண்ணம் எழுந்தது என நான் கேட்டேன்.
இவ்வாறு நீங்கள் என்னிடம் கீழ்தரமாக நடந்து கொண்ட விஷயம் எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதை மற்றவர்களிடம் கூறி உங்களுடைய இமேஜை நான் கெடுக்க விரும்பவில்லை. இது போன்று என்னிடம் நடந்து கொள்ளாமல் இருங்கள் என அந்த நடிகரை கூப்பிட்டு எச்சரித்து விட்டதாக நடிகை பிரகதி பகிர்ந்து இருக்கிறார்.
இதுபோன்று சினிமா துறையில் நடப்பது வழக்கமான ஒரு விஷயம் என்றாலும், நடிகை பிரகதி இதனை பேட்டியில் வெளிப்படையாக கூறியிருப்பது அனைவரின் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
