ஆளே மாறிப்போன சமந்தா.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.. வெளியான புகைப்படங்கள்!.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக அறியப்படுபவர் நடிகை சமந்தா. சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் சினிமாவில் சாதிப்பதற்காக பல கஷ்டங்களைக் கடந்து பிறகு சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா தற்போது அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மாஸ்கோவின் காதலி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கில் வெளியான ஏ மாயா கேசவா என்ற திரைப்படத்தின் மூலம் அனைவரின் மத்தியிலும் பிரபலமடைந்தார்.

இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சமந்தாவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து அவரைப் பற்றிய கருத்துக்களை தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

நடிகை சமந்தா ருத் பிரபு

நடிகை சமந்தா தெலுங்கில் வெளியான ஏ மாயா கேசவா என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அந்த திரைப்படம் தமிழில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷன் ஆகும்.

தமிழில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அதற்காக சிறந்து தென்னிந்திய அறிமுக நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதையும் இவர் பெற்றிருந்தார்.

samantha
Social Media Bar

பிறகு தமிழ், தெலுங்கு படங்களில் மாறி மாறி நடித்துக் கொண்டிருந்த சமந்தா அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருந்தார்.

தமிழில் முன்னணி நடிகரான விஜய்யுடன் தொடர்ந்து இரண்டு படங்கள் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பு பெற்று இருந்தார்.

ஆரம்பத்தில் பல கஷ்டங்களை கடந்து வந்த சமந்தா தெலுங்கில் தன் முதல் படத்தில் நடித்த நடிகரான நாக சைத்னயாவை திருமணம் செய்து கொண்டு கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இந்நிலையில் மயோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

சமந்தாவை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

சமீபத்தில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்காக பல சிகிச்சைகளை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

பல திரைப்படங்களில் க்யூட்டாக அழகாக இருந்த நடிகை சமந்தாவிற்கு தென்னிந்திய ரசிகர்கள் ஏராளம். தற்போது பல நடிகைகளும் அறிமுகமாகும் போது ரசிகர்களின் மத்தியில் ஒரு தோற்றத்தில் அறிமுகமாகி பிரபலமடைந்து இருப்பார்கள்.

samantha new look

இந்நிலையில் பல நடிகைகளும் தங்களின் உடம்பை குறைப்பதற்காக உடற்பயிற்சி செய்வது, டயட் எடுத்துக் கொள்வது போன்ற பல காரணங்களினால் தற்போது அவர்களின் உடல் தோற்றம், முகம் தோற்றம் மாறி ரசிகர்களால் பல கருத்துக்கள் உள்ளாக்கப்படுகிறார்கள்.

அதுபோல தான் சமந்தா தற்போது பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருக்கும்போது அவரைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். காரணம் அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது மாடனான உடையில் வந்திருந்தார். மேலும் அதில் அவர் மிகவும் இழைத்து குச்சி போல காட்சி அளித்ததாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் சில நெடிசன்கள் சமந்தா எலும்பாக இருக்கிறார். ஏன் இப்படி உடம்பை இழைத்து இருக்கிறார். என்றும் பல கருத்துக்களை தெரிவித்து வந்திருக்கிறார்கள் தற்போது இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.