Connect with us

ஆர்யா உண்மையா இருப்பேன்னுதான் ஆரம்பத்துல என்கிட்ட சொன்னாரு… நடிகை சங்கீதா ஓப்பன் ஸ்டேட்மெண்ட்!..

Cinema History

ஆர்யா உண்மையா இருப்பேன்னுதான் ஆரம்பத்துல என்கிட்ட சொன்னாரு… நடிகை சங்கீதா ஓப்பன் ஸ்டேட்மெண்ட்!..

Social Media Bar

Actor Arya: தமிழ் சினிமாவில் பெரிதாக நடிப்பு வராவிட்டாலும் கூட வரக்கூடிய சிறிதளவு நடிப்பை வைத்து அதற்கான கதை களங்களை தேர்ந்தெடுத்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் நடிகர்கள் உண்டு. அப்படியான நடிகர்களில் நடிகர் ஆர்யாவும் ஒருவர். ஆர்யாவிற்கு செண்டிமெண்ட் காட்சிகள் அவ்வளவாக ஒத்து வராது.

ஆனால் காமெடி மற்றும் சீரியஸ் காட்சிகளில் அவரால் சிறப்பாக நடிக்க முடியும். ஆர்யா, விஷால், விஷ்ணு விஷால் எல்லாம் நண்பர்கள் ஆவர். எல்லாம் ஒரே சமயத்தில்தான் சினிமாவிற்கு வந்தனர். சினிமாவிற்கு வந்து வெகு நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தார் ஆர்யா.

இந்த நிலையில்தான் இந்தியாவில் வேறு மொழிகளில் எல்லாம் ஏற்கனவே வெற்றியாக ஒளிப்பரப்பாகி வந்த வியாகம் 18 நிறுவனத்தின் சேனலான கலர் சேனல் தமிழிலும் ஒளிப்பரப்பாக துவங்கியது.

இந்த டிவியை பிரபலப்படுத்துவதற்காக எங்க வீட்டு மாப்பிள்ளை என்கிற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியின்ப்படி நடிகர் ஆர்யாவை திருமணம் செய்துக்கொள்ள விரும்பும் பெண்கள் போட்டியில் கலந்துக்கொள்ளலாம்.

பல சுற்றுகளை தாண்டி ஆர்யாவிற்கு பிடிக்கும் பெண் அவரை திருமணம் செய்துகொள்ள முடியும். இந்த நிகழ்ச்சியை நடிகை சங்கீதா தொகுத்து வழங்கினார். இதில் பெண்களுக்கு எல்லாம் ஆசை காட்டி இறுதியில் யாரையும் தேர்ந்தெடுக்காமல் ஏமாற்றிவிட்டார் ஆர்யா என்றொரு குற்றச்சாட்டு உண்டு.

Actress sangeetha

பிறகு நடிகை சாயிஷாவை திருமணம் செய்துக்கொண்டார் ஆர்யா. இதனால் அப்போதே சினிமா ரசிகர்கள் அவரை கழுவி ஊற்றினர். அப்படி விமர்சிக்கும்போது அதில் நடிகை சங்கீதாவையும் வைத்து செய்தனர். பிறகு ஒரு பேட்டியில் இதுக்குறித்து சங்கீதா கூறும்போது பொது மக்களை ஏமாற்றும் எந்த நிகழ்ச்சிக்கும் நான் துணை போக மாட்டேன்.

ஆரம்பத்தில் நான் ஆர்யாவிடம் கேட்டப்போது நிஜமாகவே இந்த நிகழ்ச்சியின் வழியாக தேர்ந்தெடுக்க போவதாகதான் கூறினான். ஆனால் இறுதியில் அவனால் யாரையும் தேர்ந்தெடுக்க முடியவில்லை என கூறியிருந்தார். இதற்கும் உருட்டாதீங்கள் என்று ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

To Top