Cinema History
வயித்து பொழப்புக்காகதான் க்ளாமரா நடிச்சேன்!.. ஆனா தற்கொலை வரை கொண்டு போயிடுச்சு!.. கண்ணீர் விட்ட தமிழ் நடிகை!..
Actress Sona : சினிமா துவங்கிய காலகட்டம் முதலே அதில் கவர்ச்சி என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது உண்மையில் சினிமாவையும் கவர்ச்சியையும் தனித்தனியாக பிரிக்கவே முடியாது.
இருந்தாலும் மலையாள சினிமா அதில் மாறுபட்டு ஆரம்பத்தில் அதிக கவர்ச்சிகளுடன் கூடிய சினிமாக்களை வெளியிட்டிருந்தாலும் தற்சமயம் அதிகபட்சம் கவர்ச்சியாக இல்லாத திரைப்படங்கள்தான் மலையாளத்தில் வந்து கொண்டிருக்கின்றன.
தமிழ் சினிமாவும் அதில் ஓரளவு முன்னேறி இருக்கிறது என்று கூறலாம். பெரிய ஹீரோக்கள் திரைப்படத்தில் கூட அதிகமாக கவர்ச்சி பாடல்கள் இப்போது இருப்பதில்லை. ஆனால் தெலுங்கு சினிமாக்கள் பாலிவுட் சினிமாக்கள் எல்லாம் கவர்ச்சியிலேயே ஊறி போய் இருப்பதால் அங்கு அதன் தேவை அதிகமாக இருக்கிறது.

இந்த நிலையில் தமிழில் கவர்ச்சி நடிகை ஆக இருந்த நடிகை சோனா ஒரு பேட்டியில் பேசும்பொழுது இந்த கவர்ச்சி நடிகையாக இருப்பது தனது வாழ்வை எவ்வளவு பாதித்தது என்று அவர் கூறுகிறார். இந்த பேட்டியில் அவர் கூறும் பொழுது என்னை பற்றி எப்போதும் எல்லோரும் தவறாக தான் பேசினார்கள்.
கவர்ச்சியால் வந்த பிரச்சனைகள்:
எனக்கு அனைத்து போதை பழக்கங்களும் இருப்பதாக பேசினார்கள். இதனால் நான் தற்கொலை கூட செய்து கொள்ள எண்ணினேன். ஆனால் செய்து கொள்ளவில்லை இவர்களுக்காக எல்லாம் எதற்காக தற்கொலை செய்ய வேண்டும் என்று விட்டுவிட்டேன்.
ஆனால் என் வாழ்க்கையிலேயே நான் செய்த மிகப்பெரிய தவறு என்றால் அது இந்த கவர்ச்சி நடிகையாக நடித்ததுதான். அதிலேயும் நான் முழு ஈடுபாட்டுடன் நடிக்கவில்லை அப்படி நடித்திருந்தால் ஒருவேளை சில்க் ஸ்மிதா மாதிரி அதில் பெரிய நடிகையாக ஆகியிருப்பேன். ஆனால் அப்படியும் இல்லை.

ஏனெனில் எனது குடும்பத்தை பாதுகாக்க அப்பொழுது எனக்கு ஒரு வேலை தேவைப்பட்டது. அதை தவிர எனது மனதில் அப்பொழுது வேறு ஒன்றும் இருக்கவில்லை. நான் இந்த மக்களிடம் வேண்டி கேட்டுக்கொள்வதெல்லாம் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டிக் கொள்ளுங்கள்.
ஆனால் நான் இறந்த பிறகு என்னுடைய பிணத்தை உடனே புதைத்து விடுங்கள். ஏனெனில் சமீபத்தில் ஒரு செய்தியில் ஒரு நடிகை இறந்து மூன்று நாட்களுக்கு யாருக்குமே தெரியவில்லை. அவரது உடலில் இருந்து வாடை வந்த பிறகுதான் அவர் இறந்ததை அறிந்து மக்கள் புதைத்திருக்கின்றனர். அப்படியான நிலைமை என்னுடைய உடலுக்கு ஏற்படக்கூடாது என்று நினைக்கிறேன் என்று கண்ணீர் விட்டபடி கூறியிருக்கிறார் நடிகை சோனா.
