Tamil Cinema News
லப்பர் பந்து நடிகைக்கு அடித்த ஜாக்பாட்.. த்ரிஷாவுடன் கூட்டணி..!
இப்பொழுதெல்லாம் பெரிய ஹீரோக்கள் படங்களுக்கு மட்டும் வரவேற்பு இருக்கும் என்கிற நிலை மாறி நல்ல கதையாக இருந்தால் மக்கள் எந்த படமாக இருந்தாலும் பார்க்கத் துவங்கி விட்டனர்.
அப்படி நல்ல கதை என்பதாலேயே மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற திரைப்படங்களில் லப்பர் பந்து முக்கியமான திரைப்படம் ஆகும். சமீபத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படத்திற்கு திரையரங்கங்களில் வெளியான பொழுது பெரிதாக வரவேற்பு என்பது இல்லை.
ஆனால் படம் வெளியான பிறகு இந்த படத்தை பலரும் கொண்டாடத் துவங்கினர் அதனை தொடர்ந்து படத்திற்கு வரவேற்பு அதிகரித்தது இந்த நிலையில் லப்பர் பந்து ஒரு வெற்றி படமாக மாறியது.
அந்த திரைப்படத்தில் இரண்டு நடிகைகள் முக்கியமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர் அதில் ஒருவர் நடிகை சுவாசிகா. இன்னொருவர் சஞ்சனா.
நடிகைக்கு வாய்ப்பு:
சுவாசிகா நடிகர் அட்டகத்தி தினேஷ் கதாபாத்திரத்திற்கு மனைவியாக நடித்திருந்தார். அதே சமயம் சஞ்சனா ஹரிஷ் கல்யாணிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த நிலையில் சுவாசிகாவின் நடிப்பு அதிகமாக பேசப்பட்டது.
ஏனெனில் குறைந்த வயதுடைய சுவாசிகா வயதான கதாபாத்திரத்தில் அந்த திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து சூர்யா அடுத்து நடிக்கும் 45ஆவது திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது இந்த திரைப்படத்தில் திரிஷா தான் கதாநாயகியாக நடிக்கிறார் ஆனால் இவருக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.