Actress
எஸ் ஸ்ட்ரெக்ச்சர்னா என்னான்னு தெரியுமா.. கொழுக்கு மொழுக்கு அழகில் ஐஸ்வர்யா மேனன்..
காதலில் சொதப்புவது எப்படி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டம் முதலே அவருக்கு கதாநாயகியாக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது.
பெரும்பான்மையான நடிகைகள் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகி ஆக வேண்டும் என்கிற ஆசையில் வந்தாலும் கூட அவர்களுக்கு கதாநாயகி ஆவதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

துணை கதாபாத்திரத்தில் வாய்ப்பு:
அந்த வகையில் ஆரம்பத்தில் பல படங்களில் துணை கதாபாத்திரங்களாகதான் நடித்து வந்தார் ஐஸ்வர்யா மேனன். காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்திற்கு பிறகு ஆப்பிள் பெண்ணே, தீயாய் வேலை செய்யணும் குமாரு மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் துணை கதாபத்திரங்களில் நடித்து வந்தார் ஐஸ்வர்யா மேனன்.

அவர் கொஞ்சம் கருப்பு நிறத்தில் இருந்ததும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்ததற்கு காரணமாக இருந்தது. அதன் பிறகு முக அறுவை சிகிச்சையெல்லாம் செய்து தனது லுக்கையை மாற்றிக் கொண்டு திரும்பவும் தமிழ் சினிமாவில் 2018 இல் ரீ என்ட்ரி கொடுத்தார் ஐஸ்வர்யா மேனன்.

கதாநாயகியாக வாய்ப்பு:
தமிழ் படம் 2 திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து நான் சிரித்தால் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்தார் ஐஸ்வர்யா மேனன். தொடர்ந்து இப்பொழுது கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகளை அவர் பெற்று வருகிறார்.

தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிகரமான கதாநாயகியாக எழுந்து வருகிறார் ஐஸ்வர்யா மேனன். அதனை தொடர்ந்து டீசென்ட் லுக்கில் ஐஸ்வர்யா மேனன் வெளியிடும் புகைப்படங்களுக்கு எப்பொழுதுமே வரவேற்பு உண்டு. அந்த வகையில் கருப்பு உடையில் சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக பிரபலமாகி வருகின்றன.

