News
எனக்கு இந்த மாதிரி புருஷன் வேணும்.. அதிர்ச்சி கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஒரு நடிகை இப்படி சொல்லுவாங்கன்னு எதிர்பார்க்கல..!
தமிழ் சினிமாவில் பல நடிகைகள் அறிமுகமானாலும், ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பது என்பது பெரிய விஷயம் அல்ல. அவர்கள் நடிக்கும் படத்தில் அவர்கள் கொடுக்கும் எக்ஸ்பிரஷன், நடிக்கும் விதம், நடனம் போன்ற ஏதோ ஒன்று ரசிகர்களை கவர்ந்து விட்டால் போதும் அந்த நடிகைகளை பின்தொடர்ந்து தங்களின் கனவு கன்னியாக மாற்றிவிடுவார்கள்.
சின்னத்திரையில் தொகுப்பாளராக வேண்டும் என்ற ஒரு சிறிய கனவுடன் தொடங்கிய தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறியிருப்பவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவர் சினிமாவிற்குள் நுழைந்தது முதல் தற்பொழுது முன்னணி நடிகையாக வலம் வருவது என இவர் கடந்து வந்த பாதைகள் பற்றிய பல சுவாரசியமான தகவல்களை அவ்வப்போது பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கு வர வேண்டிய மாப்பிள்ளை எவ்வாறு இருக்க வேண்டும் என ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்து பகிர்ந்துள்ளார். அது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் அவர்களின் ரசிகர்களின் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ் தற்பொழுது தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் 4 தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது பெற்றிருக்கிறார். மேலும் 1பிலிம்ஸ் பேர் விருது மற்றும் ஒரு தமிழ்நாடு மாநில திரைப்பட விருது ஆகியவற்றை பெற்றிருக்கிறார்.
தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் மானாட மயிலாட என்ற ரியாலிட்டி ஷோவில் வெற்றி பெற்ற பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கியது.

சினிமாவில் கிடைக்கக்கூடிய வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ஐஸ்வர்யா ராஜேஷ் தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
வருங்கால கணவர் குறித்த எதிர்பார்ப்பு
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷிடம் உங்களுக்கு வர வேண்டிய மாப்பிள்ளை எவ்வாறு இருக்க வேண்டும் என கேட்டதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் வெட்கத்துடன் எனக்கு சூப்பர் மேன் ஸ்பைடர் மேன் போன்ற மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம்.
எனக்கு மரியாதை தரக்கூடிய பையனாகவும், அன்பு, கேரிங் கொடுக்கக்கூடிய பையனாக இருந்தால் போதுமானது. எல்லா பெண்களும் இவ்வாறு தான் எதிர்பார்ப்பார்கள். எனக்கும் இது போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் நான் திருமணம் செய்து கொள்வேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருக்கிறார்.
நடிகை என்றாலே பணக்கார மாப்பிளைகளை விரும்பும் நிலையில் கேரிங்க், லவ் மட்டும் உள்ள சாதாரண ஆண் மகன் கணவனாக கிடைத்தால் போதும் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
