சர்ச்சையை கிளப்பணும்னே கேள்வி கேட்காமல் கொஞ்சம் அர்த்தமா கேட்கலாம்!.. பத்திரிக்கையாளர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..
Aishwarya Rajesh : வெள்ளை நிறம் மட்டுமே அழகு கிடையாது என்பதை தமிழ் சினிமாவில் நிரூபித்த பல நடிகைகளில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியமானவர். மாநிறம் ஆன நிறத்தை கொண்டு இருந்தாலும் கூட ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு நடிகையாக அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர்.
ஆனால் போகப் போக வெள்ளை நிறத்தின் மீது இருந்த ஆர்வம் அவரையும் தொற்றிக் கொண்டது. அதனைத் தொடர்ந்து தற்சமயம் தனது முகத்தை வெள்ளையாக்கி இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆனாலும் அவர் அதற்கு முன்பு நடித்த காக்கா முட்டை போன்ற திரைப்படங்கள்தான் வெகுவாக பேசப்பட்டது.
தற்சமயம் நயன்தாரா போலவே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் தற்சமயம் சென்னையில் வெள்ளம் வந்த சமயத்தில் வெளிநாட்டிற்கு படப்பிடிப்பிற்கு சென்று விட்டார்.

அதனால் விஜயகாந்தின் இறப்பிற்கு கூட அவரால் வர முடியவில்லை நேற்றைய தினம்தான் ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ்நாட்டிற்கு வந்தார். இந்நிலையில் ஒரு கடையின் திறப்பு விழாவிற்கு அவரை சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்ததால் அங்கு சென்றிருந்தார்.
அப்பொழுது வந்த பத்திரிகையாளர்கள் தொடர்ந்து வெள்ளம் பிரச்சினை குறித்தும் விஜயகாந்தின் இறப்பு குறித்தும் அவரிடம் கேள்விகள் கேட்டனர் அப்போது பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் சர்ச்சையை கிளப்ப வேண்டும் என்று கேள்விகளை கேட்காதீர்கள் நான் வந்திருப்பது ஒரு கடை திறப்பு விழாவிற்கு அது தொடர்பாக மட்டும் கேள்வியை கேளுங்கள் என்று நேரடியாகவே பத்திரிகையாளர்களிடம் கூறிவிட்டார்.
இதனை அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு கூடி வருகிறது.