Tamil Cinema News
தல அஜித்குமார் தவறவிட்ட 3 ப்ளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. நடிச்சிருந்தா செமையா இருந்திருக்கும்..!
தமிழ் நடிகர்களை பொருத்தவரை அவர்கள் நிறைய திரைப்படங்களின் வாய்ப்புகளை தவற விட்டிருப்பார்கள். சில நடிகர்களுக்கு அது பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் சில நடிகர்களுக்கு அது சினிமா வாழ்க்கையிலேயே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடும்.
அப்படியாக நடிகர் அஜித் தவறவிட்டு பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படங்கள் மூன்று இருக்கின்றன. அவற்றைதான் இப்பொழுது பார்க்க போகிறோம். அதில் முதலிடத்தில் இருக்கும் திரைப்படம் நடிகர் மாதவன் நடித்த ரன் திரைப்படம்.
இந்த திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கினார் இந்த திரைப்படத்திற்கான கதையை முதலில் அஜித்திடம்தான் அவர் கூறினார் ஆனால் அஜித் அப்பொழுது அதில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு மாதவன் நடித்த அந்த படம் பெரிய வெற்றியை கொடுத்தது.
தவறவிட்ட படங்கள்:
பிறகு லிங்குசாமியை சந்தித்த அஜித் என்னை வைத்து படம் பண்ணுங்கள் என்று அவரை கேட்டார். அதற்காக லிங்குசாமி செய்த திரைப்படம் தான் ஜி ஆனால் ஜி திரைப்படம் பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை. அதேபோல இயக்குனர் சரண் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜெமினி.
ஜெமினி திரைப்படத்தை அதற்கு முன்பே நடிகர் அஜித்தை வைத்து ஏறுமுகம் என்கிற பெயரில் படமாக்க துவங்கியிருந்தார். ஆனால் சில பல காரணங்களால் அப்பொழுது அந்த திரைப்படம் நின்று விட்டது. பிறகு சில வருடங்கள் கழித்து நடிகர் விக்ரமை வைத்து ஜெமினி என்கிற பெயரில் அந்த படம் உருவாக்கப்பட்டது.
அதுவும் பெரிய வெற்றியை கொடுத்தது. இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் கஜினி, கஜினி திரைப்படத்தில் ஆரம்பத்தில் நடிக்க இருந்தது அஜித் தான். அதற்கான ஆரம்பகட்ட வேலைகளும் தொடங்கின. ஆனால் அஜித்துக்கு இருந்த வேறு சில பிரச்சனைகள் காரணமாக அப்பொழுது அந்த படத்தில் இருந்து அஜித் விலகிவிட்டார்.
அதற்கு பிறகுதான் அந்த திரைப்படத்தில் சூர்யாவை நடிக்க வைத்தார் ஏ.ஆர் முருகதாஸ். அந்த திரைப்படம் பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படமாக அமைந்தது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்