Tamil Trailer
தளபதி ரசிகர்களை வச்சி செய்யும் பாடல் வரிகள்.. குட் பேட் அக்லி படத்தின் ஓ.ஜி சம்பவம் பாடல் வெளியானது..!
விடாமுயற்சி திரைப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். ஹாலிவுட்டில் வெளியான பிரேக் டவுன் என்கிற திரைப்படத்தின் ரீமேக் ஆக விடா முயற்சி திரைப்படம் உருவாக்கப்பட்டது.
அதில் உள்ள சிக்கல் என்னவென்றால் பிரேக் டவுன் திரைப்படத்தில் பெரிதாக சண்டை காட்சிகள் எதுவும் இருக்காது. அதே ஹாலிவுட் தரத்திலேயே அந்த படம் தமிழிலும் படமாக்கப்பட்டது.
ஆனால் இங்கு முக்கிய நட்சத்திரங்களின் ரசிகர்களை பொறுத்தவரை பெரிதாக சண்டை காட்சிகள் மாஸ் டயலாக்குகள் இருந்தால் தான் அந்த திரைப்படத்தை கொண்டாடுவார்கள் என்கிற நிலை இருக்கிறது.
இதனால் விடாமுயற்சி திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது அதனை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் வெகுவாக காத்துக் கொண்டிருக்கும் படமாக குட்பேட் அக்லி திரைப்படம் இருக்கிறது.
இந்த திரைப்படத்தை மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தின் ஓ ஜி சம்பவம் என்கிற பாடல் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த பாடல் முழுக்க முழுக்க அஜித்துக்கு எதிரான மனநிலையை கொண்ட ரசிகர்களை சாடும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதன் பாடல் வரிகளும் அதேபோல அமைந்து இருக்கின்றன தற்சமயம் அஜித் ரசிகர்களால் இந்த பாடல் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
