Connect with us

40 நிமிஷம் மக்களுக்காக நிக்கிறாருனா சும்மா கிடையாது.. விஜய் குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ்.!

Tamil Cinema News

40 நிமிஷம் மக்களுக்காக நிக்கிறாருனா சும்மா கிடையாது.. விஜய் குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ்.!

Social Media Bar

போன வருடம் பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற தன்னுடைய கட்சியை துவங்கினார். அதிலிருந்து அரசியல் ரீதியாக விஜய் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

தொடர்ந்து வெற்றிகரமாக தனது முதல் மாநாட்டை நடத்திய விஜய் தற்சமயம் மத்திய அரசு மற்றும் மாநில அரசு குறித்து அதிகமான விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் நடந்த போது கூட அது குறித்து விஜய் தனது கருத்தை தெரிவித்திருந்தார்.

தன்னுடைய 69 வது திரைப்படத்திற்கு பிறகு விஜய் முழுவதுமாக சினிமாவில் இருந்து விழாவாக இருக்கிறார். அதற்கு பிறகு முழுமையாக அரசியலில் ஈடுபட இருக்கிறார். அடுத்த வருடம் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

vijay

vijay

இந்த நிலையில் அரசு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு விஜய் விழா ஒன்று எடுத்தார். அந்த விழா குறித்து லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் லோகேஷ் கனகராஜ் கூறும் பொழுது விஜய் அந்த விழாவிற்கு சென்றபோது அவர் லியோ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

அந்த விழாவுக்காக இரவோடு இரவாகக் கிளம்பி தமிழ்நாட்டுக்கு வந்தார். தமிழ்நாட்டில் வந்து அந்த விழாவை நடத்தியது மட்டும் இல்லாமல் விழாவில் 40 நிமிடம் நின்றபடியே இருந்தார் விஜய்.

அவ்வளவு கலைப்பு அடைந்த பிறகும் கூட அன்று இரவே கிளம்பி மறுநாள் காலை படப்பிடிப்பு தளத்தில் வந்து நின்றார். அந்த அளவிற்கு தமிழ்நாடு மக்கள் மீது விஜய்க்கு அன்பு இருக்கிறது எனவே கண்டிப்பாக அரசியலில் நல்ல விஷயங்களை செய்வார் என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

Articles

parle g
madampatty rangaraj
To Top