வருகிற பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கும் இரு பிரமாண்டமான திரைப்படங்கள் வாரிசு மற்றும் துணிவு. விஜய் மற்று அஜித் நடித்து வெளியாகும் திரைப்படங்கள் என்பதால் மக்கள் மத்தியில் இந்த திரைப்படங்களுக்கு வரவேற்பு கூடி வருகிறது.

வெகு காலங்களுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் இருவரும் போட்டி போடும் திரைப்படங்களாக இவை உள்ளன. இந்த நிலையில் இரண்டு படங்களின் அப்டேட்களும் வரிசையாக வந்த வண்ணம் உள்ளன.
வாரிசு படத்தின் ட்ரைலர் வருகிற டிசம்பர் 31 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் துணிவு படத்தின் அப்டேட்டும் கூட தற்சமயம் வெளியாகியுள்ளது.
அதே டிசம்பர் 31 ஆம் தேதிதான் துணிவு படத்தின் ட்ரைலரும் வெளியாக உள்ளது. ஆனால் துணிவு படத்தின் ட்ரைலரை உலக அளவில் கொண்டாட இருக்கிறது படக்குழு.
அமெரிக்காவில் பிரபலமான இடமான நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர் மற்றும் துபாயில் உள்ள உலகிலேயே பெரும் கட்டிடமான ப்ருஜ் கலிஃபா ஆகிய இடங்களில் துணிவு படத்தின் ட்ரைலரை திரையிட முடிவு செய்துள்ளனர்.