Connect with us

அட்லீ இயக்கத்தில் அடுத்த படம்! – வேல்டு டூரை கேன்சல் செய்த அஜித்!

News

அட்லீ இயக்கத்தில் அடுத்த படம்! – வேல்டு டூரை கேன்சல் செய்த அஜித்!

Social Media Bar

தற்சமயம் ஹெச்.வினோத் இயக்கத்தில் பெரும் ஹிட் படத்தை கொடுத்தார் நடிகர் அஜித். அதனை அடுத்து தற்சமயம் விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க உள்ளார் அஜித். விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படம் குடும்ப படமாக இருக்கலாம் என்கிற பேச்சு இருந்து வருகிறது.

ஏனெனில் ஏற்கனவே விஸ்வாசம், வீரம், வேதாளம் போன்ற குடும்ப படங்கள் அஜித்க்கு நல்ல வெற்றியை தந்துள்ளன. மேலும் தற்சமயம் நடித்துள்ள துணிவு படமும் குடும்பங்களுக்கு ஏற்ற படமாக இல்லாததால் அடுத்த படம் அவர் குடும்ப படமாக நடிக்கவே வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புக்கு பிறகு உலகை பைக்கிலேயே சுற்றி வர வேண்டும் என ஆசைப்பட்டார் அஜித். எனவே விக்னேஷ் சிவன் படத்திற்கு பிறகு 18 மாதங்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள இருந்தார்.

ஆனால் அதற்கு அடுத்து 62வது படம் அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வலம் வருகின்றன. பிகில் திரைப்படத்திற்கு பிறகு அட்லீ தமிழில் படம் இயக்கவில்லை. தொடர்ந்து ஹாலிவுட் திரைப்பட காட்சிகளை அவரது திரைப்படங்களில் அப்படியே வைப்பதும், அதை பொது மக்கள் ட்ரோல் செய்வதுமாக இருந்ததால், தமிழ் சினிமாவை விட்டு விலகி பாலிவுட் சினிமா பக்கம் சென்றுவிட்டார் அட்லீ.

இந்த நிலையில் அஜித் படம் மூலம் அவர் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

To Top