தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். தமிழ் சினிமாவில் அஜித்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அஜித்தும் அவர்களுக்கு பிடித்தாற் மாதிரி ஆக்ஷன் திரைப்படங்களாக நடித்து வருகிறார்.
ஆனால் அஜித் பொதுவாக மக்கள் மத்தியில் தோன்றவே மாட்டார். இசை வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா, பேட்டிகள் என எதிலுமே அஜித்தை பார்க்க முடியாது. இந்த நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பிறகு வெகு வருடங்கள் கழித்து பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார் அஜித்.
அதில் அவர் கூறிய விஷயங்கள் அனைத்து நடிகர்களும் பின்பற்ற வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது. இத்தனை ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்தாலும் அதற்கு தொடர்பு இல்லாமல் அஜித் நடித்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த திரைப்படத்தில் நடித்தது குறித்து அஜித் முக்கியமான விஷயம் ஒன்றை கூறியுள்ளார்.

அதில் அவர் கூறும்போது நான் குற்றவுணர்ச்சியின் காரணமாகவே நேர்க்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்தேன். இதற்கு முன்பு நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளேன். அவற்றில் சிலவற்றில் பெண்களை தவறாக சித்தரித்த காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.
அந்த குற்றவுணர்ச்சி எனக்கு இருந்துக்கொண்டே இருந்தது. அதனால்தான் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தேன் என அஜித் கூறியிருக்கிறார். இப்போதும் திரைப்படங்களில் பெண்களை தவறாக சித்தரிக்கும் இயக்குனர்களுக்கும் நடிகர்களுக்கும் பதிலடியாக உள்ளது அஜித்தின் இந்த பதில்.






