Cinema History
பொறுமை எல்லாம் ஒரு அளவுக்குதான் ப்ரோ!.. மகிழ் திருமேனிக்கு வார்னிங் கொடுத்த அஜித்!..
Actor Ajith : துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு உலகம் முழுவதும் இருசக்கர வாகனத்திலேயே சுற்றுலா செல்ல வேண்டும் என்கிற யோசனையுடன் தனது பயணத்தை தொடங்கினார் அஜித். இதற்கு நடுவே இயக்குனர் மகிழ்திருமேனி அஜித்திற்காக விடாமுயற்சி படத்தின் கதையை எழுதி வைத்துவிட்டு காத்திருந்தார்.
அஜித் வருவதற்கு காலதாமதம் ஆனதற்கு இடையில் நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்து விட்டது. இந்த நிலையில் அடுத்து விஜய் நடிக்கும் GOAT திரைப்படத்திற்கு போட்டியாக அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க துபாயில் நடந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் கதை தான் நிர்ணயித்த மாதிரி செல்ல வேண்டும் என்பது மகிழ் திருமேனியின் ஆசையாக இருக்கிறது. ஆனால் பெரிய கதாநாயகர்களை பொருத்தவரை படத்தில் அவர்களுக்கு தகுந்தார் போல மாற்றங்களை அவர்கள் ஏற்படுத்துவார்கள்.

ஆனால் அஜித் அந்த மாதிரியான விஷயங்களை செய்வதற்கு மகிழ் திருமேனி ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே கொஞ்சம் பிரச்சனை இருந்து வருகிறதாம். மேலும் பிப்ரவரி மாதம் வரையில்தான் விடா முயற்சிக்கான கால் சீட்டை கொடுத்திருக்கிறார் அஜித்.
ஆனால் ஜனவரியை வந்துவிட்ட நிலையில் படத்திற்கான படப்பிடிப்பை தான் முடித்திருக்கிறார் மகிழ்திருமேனி. எனவே அவரை அழைத்து அடுத்த மாதத்திற்கு மேல் என்னால் ஒரு நாள் கூட கால் சீட்டு கொடுக்க முடியாது அதற்குள் மொத்த படத்தையும் எடுத்து விடுங்கள் என்று எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார் அஜித்.
