ரன்வீர் சிங் கூடவா? ஒரு வாரம் கூட ஆகல.. ஆல்யா பட் எடுத்த திடீர் முடிவு!
சமீபத்தில் பிரம்மாண்டமாக ஆல்யா பட் – ரன்பீர் கபூர் திருமணம் நடந்து முடிந்த நிலையில் ஆல்யா எடுத்த முடிவு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

இந்தியில் ஸ்டூடண்ட் ஆப் தி இயர், கல்லி பாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆல்யா பட். இவர் இந்தி திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் மகள் ஆவார். சமீபத்தில் இவர் நடித்து வெளியாக கங்குபாய் பெரும் விமர்சனங்களை சந்தித்தது.
ஆல்யா பட்டும் இந்தி நடிகர் ரன்பீர் கபூரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சியில் பல்வேறு இந்தி பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

திருமணம் முடிந்து ஒரு வாரம் கூட முழுதாக முடியாத நிலையில் தனது அடுத்த பட ஷூட்டிங்கிற்காக கிளம்பியுள்ளார் ஆல்யா பட். கரன் ஜோஹர் இயக்கும் ராக்கி அர் ராணி கி ப்ரேம் கஹானி என்ற அந்த படத்தில் ரன்வீர் சிங்குடன் ஆல்யா பட் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் ஏறத்தாழ முடிந்துவிட்டன.

இந்நிலையில் கடைசி கட்ட படப்பிடிப்புக்காக செல்ல ஆல்யா பட் விமான நிலையம் சென்ற புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.